Home> Lifestyle
Advertisement

Aadhaar-Mobile Link: அலட்சியம் வேண்டாம்; இன்றே செய்யவும்; அதற்கான எளிய முறை

ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பது மிகவும் முக்கியம். உங்கள் மொபைல் எண் மாறி இருந்தால் அதனை உடனே புதுப்பிக்கவும். இல்லாவிட்டால் நீங்கள் பல சேவைகளைப் பயன்படுத்த முடியாது.

Aadhaar-Mobile Link: அலட்சியம் வேண்டாம்; இன்றே செய்யவும்; அதற்கான எளிய முறை

ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பது மிகவும் முக்கியம். உங்கள் மொபைல் எண் மாறி இருந்தால் அதனை உடனே புதுப்பிக்கவும். அப்படி அப்டேட் செய்யாவிட்டால்,  நீங்கள் பல சேவைகளைப் பயன்படுத்த முடியாது.

ஆதார் (Aadhaar) ஆன்லைன் சேவைகளைப் பெற, ஆதார் அட்டைதாரர் தனது மொபைல் எண்ணை UIDAI இல் பதிவு செய்ய வேண்டும். ஆதார் அட்டையில் தனது மொபைல் எண்ணை இணைக்க, ​​அந்த நபர் தனது மொபைல் எண்ணை UIDAI-யில் பதிவு செய்ய வேண்டும்.

மொபைல் எண்ணை சேர்க்க, நீங்கள் அலுவலகத்திற்கு செல்லலாம். முடியாதவர்கள் ஆன்லைனிலும் செய்யலாம் 
உங்கள் தற்போதைய மொபைல் எண்ணை, அப்டேட் செய்ய ஆவணம் எதுவும் தேவையில்லை. நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை, அருகிலுள்ள எந்த ஆதார் சேவை மையத்திற்கு எடுத்து சென்று சென்று மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்.

ALSO READ | வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்,  சூப்பர்  ரீசார்ஜ் ப்ளான்கள்

ஆன்லைன் மூலம் ஆதார்-மொபைல் இணைக்கும்  முறை

1. உங்கள் மொபைல் ஆபரேட்டரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும்

2. இங்கே ஆதாருடன் இணைக்க வேண்டிய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்

3. இதைச் செய்த பிறகு உங்கள் மொபைலுக்கு OTP அனுப்பப்படும். இந்த OTP உள்ளீடு செய்யவும் 

4. இதற்குப் பிறகு, அதில் நீங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும்

5. தொலைதொடர்பு ஆபரேட்டர் உங்களுக்கு   எஸ்எம்எஸ் மூலம் OTP அனுப்புவார்

6. e-KYC க்கான ஒரு ஒப்புதல் செய்தி அனுப்பப்படும், நீங்கள் அதற்கு ஒப்புதலைக் கொடுத்து OTP ஐ நிரப்ப வேண்டும்.

7. ஆதார் மற்றும் மொபைல் இணைக்கப்பட்டது குறித்து உறுதிப்படுத்திய தகவல் உங்கள் மொபைலில் வரும்

ஆதார் தொடர்பான ஏதேனும் சிக்கல் இருந்தால், நீங்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் ஆன 1947 ஐ அழைக்கலாம். உங்கள் புகார் அல்லது நீங்கள் சந்திக்கும் பிரச்சனையை மின்னஞ்சல் மூலம், help@uidai.gov.in என்ற முகவரிக்கு எழுதலாம். உங்கள் பிரச்சினையை விரைவில் தீர்க்க UIDAI முயற்சிக்கும்.

ALSO READ | Google Search: கூகிளில் இவற்றை ஒருபோதும் தேடகூடாது; அதனால் பெரும் இழப்பு ஏற்படலாம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More