Home> Lifestyle
Advertisement

மத்திய ஊழியர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்.. அகவிலைப்படியில் பெரும் பரிசு

DA Hike: செப்டம்பர் 30 ஆம் தேதி மாலை அளவில் அகவிலைப்படி தொடர்பான புதிய எண்கள் வெளிவரும். அடுத்த அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.

மத்திய ஊழியர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்.. அகவிலைப்படியில் பெரும் பரிசு

7வது ஊதியக் குழு முக்கிய அப்டேட்: மத்திய ஊழியர்கள் தங்களது அகவிலைப்படி உயர்வுக்கான அறிவுப்புக்காக காத்திருக்கின்றனர். இந்த அகவிலைப்படி எந்த நாளில் அங்கீகரிக்கப்படும், அதன் பலன் எப்போது கிடைக்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என்பதும், அது ஜூலை 1, 2023 முதலே அமலுக்கு வருவதும் உறுதியாகும். இருப்பினும், அடுத்த 24 மணிநேரத்தில் இன்னும் சிறப்பான செய்திகளைப் பெறலாம். உண்மையில், செப்டம்பர் 30 ஆம் தேதி மாலைக்குள் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொடர்பான புதிய எண்கள் வெளிவரும். மேலும் அடுத்த அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதும் வெளிப்படுத்தப்படும். குறியீட்டு எண் அதிகரித்தால், அது ஒரு பெரிய பரிசாக அரசு ஊழியர்களுக்கு இருக்கும்.

AICPI குறியீட்டு எண்கள் செப்டம்பர் 30 மாலை வெளிவரும்:
இந்நிலையில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் என இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும். தற்போது வரை ஊழியர்களுருக்கு 42 சதவீத ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே ஆகஸ்ட் மாதத்திற்கான AICPI-IW எண்கள் நாளை அதாவது செப்டம்பர் 30 ஆம் தேதி மாலை வெளியிடப்படும். தற்போதைய நிலவரப்படி, அகவிலைப்படி 47 சதவீதத்தை தாண்டியுள்ளது. வரும் நாட்களில் 48 சதவீதத்தை தாண்டவும் வாய்ப்பு உள்ளது. இந்த எண்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்தப்பட உள்ள அகவிலைப்படி எண்களை உறுதி செய்யும். இந்த எண்கள் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான குறியீட்டிலிருந்து இருக்கும். இதனிடையே ஜூலை 2023க்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களில் 3.3 புள்ளிகளுடன் பெரிய முன்னேற்றத்தை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டில் 10% தள்ளுபடி வேண்டுமா..? ‘இதை’ செய்யுங்கள் போதும்..!

AICPI இன்டெக்ஸ் எப்படி இருந்தது?
AICPI குறியீட்டின் ஜூலை எண்களில் 3.3 புள்ளிகள் அதிகரித்தது. ஜூலை 2023 இல் குறியீடு 139.7 புள்ளிகளை எட்டியுள்ளது. இதன் அடிப்படையில் அகவிலைப்படி மதிப்பெண் 47.14 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்போது அகஸ்ட் எண்கள் அகவிலைப்படி எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதை முடிவு செய்யும். இருப்பினும், அதன் இறுதி எண் டிசம்பர் 2023 வரை பெறப்பட்ட தரவுக்குப் பிறகு கணக்கிடப்படும். அடுத்த ஆண்டு அதாவது ஜனவரி 2024க்குள் அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும் என்று நிபுணர்கள் முன்னதாகவே கூறியுள்ளனர்.

7வது ஊதியக் குழுவின் கீழ், அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டியவுடன் அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். அதாவது அகவிலைப்படியின் கணக்கீடு 0 இலிருந்து தொடங்கும். 50 வீதம் கொடுப்பனவாகப் பெறப்படும் பணம் அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும். 2016-ம் ஆண்டு 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தும் போது அரசு இதை அறிவித்தது. எடுத்துக்காட்டாக, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18000 என்று வைத்துக்கொள்வோம், அப்போது அவர் 50% டிஏவில் ரூ.9000 பெறுவார், அப்படியானால், டிஏ பூஜ்ஜியமாக மாறினால், அது அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படும். அதாவது, பணியாளரின் அடிப்படை சம்பளத்துடன் ரூ.9000 அலவன்ஸ் சேர்த்து அடிப்படை சம்பளம் உயர்த்தப்படும்.

அகவிலைப்படிக்காக காத்திருப்பு:
இருப்பினும், அடுத்த ஆண்டு என்ன நடந்தாலும், அதற்கு முன், இந்த ஆண்டின் இரண்டாம் பாதிக்கான அகவிலைப்படிக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மேலும் தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. ஆனால், எந்த நாளில் ஊழியர்களுக்கு இந்த நல்ல செய்தி கிடைக்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 2000 ரூபாய் நோட்டு தொடர்பான புதிய அப்டேட் தந்த ரிசர்வ் வங்கி.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More