Home> Lifestyle
Advertisement

உடலுறவுக்குப் பிறகு ஆண்கள் பெண்களை விட்டு விலகுவதற்கான 3 காரணங்கள்

உடலுறவுக்குப் பிறகு ஆண்கள் பெண்களை விட்டு விலகுவதற்கான 3 முக்கிய காரணங்கள்  

உடலுறவுக்குப் பிறகு ஆண்கள் பெண்களை விட்டு விலகுவதற்கான 3 காரணங்கள்

உடலுறவு என்பது ஆண் - பெண் உறவில் இருக்கும் ஆரோக்கியமான அம்சம். விரும்பியவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் புலப்படுவதை உணரமுடியும். ஆனால், உடலுறவு மூலம் கிடைக்கும் பேரானந்தத்திற்கு முன்பும், பின்பும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றையும் வாழ்க்கையில் எல்லோரும் எதிர்கொள்ள வேண்டும். இங்கு நாம் உடலுறவுக்குப் பிறகு பொதுவாக ஆண் - பெண் உறவில் ஏற்படும் 3 முக்கிய காரணங்களை பார்க்கலாம். 

அதாவது, உடலுறவுக்குப் பிறகு ஆண்கள் ஏன் பெண்களை விட்டு விலகுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம். 

கமிட்மென்ட்

பெண்களை பொறுத்தவரை உடலுறவுக்குப் பிறகு, அவருடன் மட்டுமே வாழ வேண்டும் என விரும்புவார்கள். அவர் தான் எல்லாம் என நினைத்த பிறகே அவர்கள் படுக்கைக்கு அனுமதிக்கும் நிலையில், ஆண்கள் அப்படி எண்ணுவதில்லை. உடலுறவு என்பது சகஜமான ஒன்று என நினைப்பார்கள். மேலும், திருமணம் உள்ளிட்ட கமிட்மெண்டெல்லாம் வேண்டாம் என நினைப்பார்கள். இதனால் பெண்களை விட்டு விலக நினைப்பார்கள். 

மேலும் படிக்க | கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

பயம்

தான் விரும்பிய தோழியுடன் உடலுறவு கொள்ளும்போது, அவனால் அவளை திருப்திபடுத்த முடியவில்லை என உணரும்போது, பெண்களை தவிர்க்க விரும்புவார்கள். ஆண்களுக்குள் ஒருவிதமான பயம் வந்துவிடும். தன்னை பற்றி அவள் ஏதாவது கூறிவிடுவாளோ என எண்ணி, உறவையே முறித்துக் கொள்ளக்கூட தயாராக இருப்பவர்கள் இருக்கிறார்கள். 

நெருக்கத்தை விரும்ப மாட்டார்கள்

உடலுறவுக்குப் பிறகு பெண்கள், ஆண்கள் மீது முன்பை காட்டிலும் நெருக்கமாக இருப்பார்கள். பேசுவதில் தொடங்கி, பழகுவதில், உரிமை எடுத்துக் கொள்வதில் என அனைத்து இடங்களிலும் பெண்களின் ஈடுபாடு என்பது அதிகமாக இருக்கும். இது ஒரு சில ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, ஓவராக அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறி உறவை முறித்துக் கொள்வார்கள்.

மேலும் படிக்க | உங்கள் துணையிடம் இந்த விசயத்தை மட்டும் பண்ணிடாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More