Home> India
Advertisement

Delhi Yamuna Floods: மழை இன்னும் பெய்தால் நிலைமை மோசமாகும்... டெல்லியின் நிலை என்ன?

Delhi Yamuna Floods: யமுனை நதியில் வெள்ளப்பெருக்கால் டெல்லியே வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், தற்போது அதிக மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டதை அடுத்த நிலைமை மோசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Delhi Yamuna Floods: மழை இன்னும் பெய்தால் நிலைமை மோசமாகும்... டெல்லியின் நிலை என்ன?

Delhi Yamuna Floods: டெல்லியில் வரலாறு காணாத மழைக்குப் பிறகு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், ஹரியானாவின் ஹத்னி குந்த் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும் யமுனையில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 

அதுமட்டுமின்றி, தேசிய தலைநகரான டெல்லியில் இன்று அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் லேசான மழை பெய்தது. டெல்லியில் அதிக மழை பெய்யும்பட்சத்தில், மழைநீர் நிரம்பி, அது வெளியேற வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தண்ணீர் தேங்குவது நிலைமையை மேலும் மோசமாக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த 45 ஆண்டு காலமாக இல்லாத அளவில், டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. டெல்லி வழியாக ஓடும் யமுனை இன்று காலை 207.68 மீட்டராக குறைந்தது. இந்த வார தொடக்கத்தில் யமுனை 208.66 மீட்டரை எட்டியது குறிப்பிடத்தக்கது, இது 1978இல் இருந்த 207.49 மீட்டரை விஞ்சியது. 

மத்திய டெல்லியின் ஐடிஓ மற்றும் ராஜ்காட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதால் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வரவழைக்கப்பட்டது. டெல்லியின் ஹனுமான் மந்திர், யமுனா பஜார், கீதா காலனி, சிவில் லைன்களுக்கு வெளியே உள்ள சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த வெள்ளம் உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லியில் உள்ள நிகாம் போத் காட் உட்பட சில முக்கிய இடங்களை கூட அடைந்தது.

மேலும் படிக்க | அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை

வடமேற்கு டெல்லியின் முகுந்த்பூர் சௌக் பகுதியில் வெள்ளத்தில் நீந்த முயன்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யமுனை நீர் அபாயக் கட்டத்தைத் தாண்டிய பிறகு, நகரத்தில் பதிவான முதல் மரணங்கள் இவை. யமுனா அணையின் 5 கதவுகளையும் திறக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மாலை தெரிவித்தார். "ஐடிஓ தடுப்பணையின் முதல் ஜாம் கேட் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் ஐந்து கதவுகளும் திறக்கப்படும்" என்று கெஜ்ரிவால் கூறினார்.

மழை பெய்யாவிட்டால் இன்னும் ஓரிரு நாட்களில் இயல்பு நிலை உருவாகும் என்றும், மழை பெய்தால் இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்றும் அவர் கூறினார். சாலைகள் சிறு ஆறுகளாக மாறியதால் அதிகாரிகள் மீட்பு பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் நாய்கள் மற்றும் கால்நடைகளும் இருந்தன.

மீரட் பகுதியில் இருந்து டெல்லிக்கு இரண்டு பணிக்குழுக்கள் மாற்றப்படுகின்றன. மேலும் தற்போதைய சூழலை சமாளிக்க தயார் நிலையில் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கு உதவவும் 4,500 க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர், மேலும் தண்ணீர் எவ்வளவு வேகமாக வடிகிறது என்பதைப் பொறுத்து போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அத்தியாவசியமற்ற அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) வரை மூடப்படும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று முன்தினம் (ஜூலை 13) உத்தரவிட்டிருந்தது. சிங்கு உள்ளிட்ட டெல்லியின் நான்கு எல்லைகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்பவர்களைத் தடுத்து, கனரக சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழைவதை மாநகர அரசு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | வெளுத்து வாங்கும் மழை, இந்தியா கேட்டையும் பதம் பார்க்குமா? தரையில் ஓடும் யமுனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More