Home> India
Advertisement

EVM இயந்திரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன்: மாயாவதி

பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் என மாயாவதி தெரிவித்துள்ளார்!!

EVM இயந்திரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன்: மாயாவதி

பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் என மாயாவதி தெரிவித்துள்ளார்!!

பிரதமர் மோடியின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தால் நிச்சயம் பங்கேற்றிருப்பேன் என தெரிவித்தார். 

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாட்டில் இருக்கும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைத்திருப்பும் முயற்சி மட்டும்தான். ஏழ்மை, வேலையின்மை, வன்முறைகள் அதிகரிப்பு போன்ற விவகாரங்களில் இருந்து திசைத்திருப்பும் முயற்சி மட்டும்தான். முக்கியமான விஷயம் தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள இருந்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன். 

ஜனநாயக நாட்டில் தேர்தல் செலவுகளை வீணான செலவுகளாக பார்க்காமல், சாதாரண செலவுகளாக பார்த்தால், எப்படி தேர்தல் நடந்தாலும் அது பிரச்சனையில்லை என்றும் மாயாவதி தெரிவித்தார். ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த விவரங்களை, வெள்ளை அறிக்கையாக தயாரித்து அனைத்துக் கட்சிகளுக்கும் அளிக்க, மாயாவதி வலியுறுத்தியுள்ளார். அரசியல் கட்சிகள், சட்ட நிபுணர்கள், தேர்தல் வல்லுனர்கள் போன்றவர்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே, இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Read More