Home> India
Advertisement

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை: கேரளா அரசு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கேரளா அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை: கேரளா அரசு

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கேரளா அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை கோயில் அமைந்த காலம் முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் பிரபல பெண்ணிய சமூக ஆர்வலர், திருப்தி தேசாய், 100 பெண்களுடன் சபரிமலை கோவிலுக்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார். 

ஏற்கனவே, மஹாராஷ்டிர மாநிலம், சனி சிங்னாபூர், ஹாஜி அலி தர்கா உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில், பெண்களை அனுமதிக்கக் கோரி, தேசாய் தலைமையில், பல போராட்டங்கள் நடந்துள்ளன.

ஆயிரம் ஆண்டுகளை கடந்த பாரம்பரிய நடைமுறைகளை விட்டுக் கொடுக்க முடியாது. எதற்காகவும் கோவில் பழக்க வழக்கங்களையும், நடைமுறையையும் மாற்ற முடியாது. சபரிமலை கோவிலில், பெண்களை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கேரள அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Read More