Home> India
Advertisement

இன்றுடன் நிறைவடைந்தது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில், முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது.

இன்றுடன் நிறைவடைந்தது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் டிசம்பர் 15-ம் தேதி துவங்கியது. இக்கூட்டத்தொடரில் பல பிரச்சனைகளை பற்றி விவாதங்கள் எழுந்த நிலையில் சிலவற்றிற்கு தெர்ர்வுகளும் கிடைத்தது. 

இதையடுத்து, நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் நீதிபதிகள் சம்பள உயர்வுக்கான மசோதா பார்லி. லோக்சபாவில் நிறைவேறியது. மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து 7-வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளை மத்திய அரசு  கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து அமல்படுத்தியது.நீதிபதிகள் சம்பள உயர்வுக்கான மசோதா பார்லி. லோக்சபாவில் நிறைவேறியது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து 7-வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளை மத்திய அரசு  கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து அமல்படுத்தியது.

இதையடுத்து, கடைசி நாளான இன்று முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட அரசு தீவிரம் காட்டியது. இன்றும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதனால் முத்தலாக் மசோதா தாமாகவே மசோதா பிப்ரவரி மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு மாறியது. பாஜக அரசின் காங்கிரஸ், அதிமுக எம்.பி.க்களை சமரசம் செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது.

 

Read More