Home> India
Advertisement

போராட்டத்தின் உச்சியில் பத்மாவத்! திரைப்படம் நாளை வெளியாகுமா?

நாளை வெளியாக உள்ள பத்மாவத் படத்துக்கு எதிராக அகமதாபாத்,ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

போராட்டத்தின் உச்சியில் பத்மாவத்! திரைப்படம் நாளை வெளியாகுமா?

நாளை வெளியாக உள்ள பத்மாவத் படத்துக்கு எதிராக குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டனர். 

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான `பத்மாவத்' படம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்தப் படம் நாளை (ஜனவரி 25–ம் தேதி) வெளியாகிறது. ஆனால் ‘பத்மாவத்’ படத்துக்கு குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு அகற்றி கடந்த 18–ந் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, இத்திரை படம் வெளியாவதை தொடர்ந்து கர்னி சேனா அமைப்பினர் பல இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து நேற்று உத்திரபிரதேசத்தில் ஒரு தியேட்டர் சூறையாடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, அகமதாபாத்தில் சாலையோரம் இருந்த பெட்டிக்கடைகள் அங்கு இருந்த இரு சக்கர வாகனங்களையும் போராட்டகாரர்கள் இன்று அடித்து நொறுக்கினர். இதனால், சேதம் ஏற்படுத்திய கும்பலை விரட்ட போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அகமதாபாத் பகுதி முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது.

Read More