Home> India
Advertisement

Covid தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கம்

PM Modi Missing From Covid Certificates: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

Covid தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கம்

Covishield Row: பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் தடுப்பூசி அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி கோவிஷீல்ட் மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்டிராஜெனேகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி

நாட்டில் பரவி வந்த கொரோனா நோயைக் கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை மக்கள் தவறாமல் போட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஒருபக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், சில மாதங்கள் கழித்து திடீரென உடல்நல பாதிப்புகளும், இறப்புகளும் ஏற்பட்டதால், கோவிஷீல்டு தடுப்பூசி மீது புகார்கள் எழுந்தது. 

இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு 

இந்தப் புகார்களை அடுத்து, இங்கிலாந்து நீதிமன்றத்தில், கோவில்ஷீல்டு கண்டுபிடிப்பு நிறுவனமான ஆல்டிராஜெனேகாவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக ஆல்டிராஜெனேகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சேர்ந்து அறிக்கை ஒன்று தாக்கல் செய்தது. 

கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் மற்றும் மாரடைப்பு ஏற்படலாம்

அந்த அறிக்கையில், ‘கோவிஷீல்டு தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு, டிடிஎஸ் (Thrombosis with Thrombocytopenia Syndrome) எனப்படும் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தத் தட்டுக்களின் அளவு குறைதல், மாரடைப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மிக அரிதாக நடக்கலாம் மற்றும் எல்லோருக்கும் வருவதில்லை எனக் கூறியிருந்தது. 

மேலும் படிக்க - மாரடைப்பை ஏற்படுத்தும் கோவிஷீல்டு: பகீர் கிளப்பும் பிரிட்டன் மருத்துவர்

கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் மாயமானது. 

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோவிட்-19 தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் மாயமானது. ஆம், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் கோவின் (CoWIN) சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது எக்ஸ் (X) பக்கத்தில் "கோவிட் தடுப்பூசி சான்றிதழில் மோடி ஜி இனி தெரிய வாய்ப்பில்லை. அவரது படம் போய்விட்டது, அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவருடைய புகைப்படத்தைக் காண்பீர்கள்" என நெட்டிசங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்க காரணம் என்ன?

கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து மோடியின் புகைப்படம் நீக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பிரதமரின் படம் அகற்றப்பட்டதாக 2022 ஆம் ஆண்டில் தி பிரிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க - Blood Clot Risk: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்த உறைவு ஆபத்து குறைவு

பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டதற்கு, தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் (எம்சிசி) காரணம் என்று கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் 2024 ஏழு கட்டங்களாக நடைபெற்று வருவதால், எம்சிசி (MCC) நடைமுறையில் இருப்பதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) உத்தரவுகளின்படி மோடியின் படம் அகற்றப்பட்டதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகள் தி பிரிண்டிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டது குறித்து சுகாதார அமைச்சகம் விளக்கம்

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சகம் இந்த பிரச்சினையை விரைவில் தெளிவுபடுத்தியது. சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரிகள், மாதிரி நடத்தை விதிகள் (எம்சிசி) காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். நடந்து வரும் லோக்சபா தேர்தல்.

சர்ச்சையைக் கிளப்பிய பிரதமர் மோடியின் படம்

2021 ஆம் ஆண்டில், தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் சர்ச்சையைக் கிளப்பியது. கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிற நாடுகளில் உள்ள சான்றிதழ்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்ற வாதத்திற்கு பதிலளித்த நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன், "அவர்கள் தங்கள் பிரதமர்களைப் பற்றி பெருமை கொள்ளாமல் இருக்கலாம், நமது பிரதமரைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - இந்தியாவின் கடும் கண்டனத்தை அடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அங்கீகாரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More