Home> India
Advertisement

திரைப்படப் பிரிவை இணைப்பது மற்றும் DTH உரிமம் திருத்தத்தால் ஏற்படும் மாற்றம் என்ன?

மத்திய அமைச்சரவை இன்று பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. திரைப்படப் பிரிவை இணைப்பது மற்றும் DTH உரிமம் திருத்தம் என பல திரைப்படத் துறை சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.,,,

திரைப்படப் பிரிவை இணைப்பது மற்றும் DTH உரிமம் திருத்தத்தால் ஏற்படும் மாற்றம் என்ன?

புதுடெல்லி: DTH உரிமம் மற்றும் பிற முக்கிய முடிவுகளில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியாவில் 'வீட்டிலேயே நேரடி' ('Direct to Home') சேவைகளை வழங்குவதற்கான DTH வழிகாட்டுதல்களில் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று (2020, டிசம்பர் 23) ஒப்புதல் அளித்தது.

"DTH உரிமம் 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், உரிம கட்டணம் (license fee) காலாண்டுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும்" என்று மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திரைப்படப் பிரிவு (Films Division), திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் (Directorate of Film Festivals), இந்தியாவின் தேசிய திரைப்பட காப்பகங்கள் (National Film Archives of India), மற்றும் இந்தியாவின் குழந்தைகள் திரைப்பட சங்கம் (Children's Film Society, India) ஆகியவற்றை, இந்திய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் (National Film Development Corporation) இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவையின் இந்த முடிவுகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் (Prakash Javadekar) அறிவித்தார்.

இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் ( National Film Development Corporation of India (NFDC)) அகில இந்திய அரசு சார்ந்த இந்தியத் திரைப்படம் தயாரிப்பு நிறுவனம் ஆகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது NFDC.இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய அரசால் நிறுவப்பட்ட நிறுவனமாகும்.

Also Read | ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: காரணம் இதுதான்

1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், கடந்த பல ஆண்டுகளாக இந்தியத் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.  
குழந்தைகளுக்கான பிரத்யேக சினிமா என்ற கருத்தை முன்வைத்தவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru). குழந்தைகள் திரைப்பட சங்கம், இந்தியா (Children's Film Society, India (CFSI)) 195ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Read More