Home> India
Advertisement

நேஷனல் ஹெரால்டு வழக்கின் முழுப் பின்னணி

National Herald case : சோனியா மற்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டப்பட்டுள்ள நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி குறித்து குறித்து ஒரு பார்வை.

நேஷனல் ஹெரால்டு வழக்கின் முழுப் பின்னணி

நேஷனல் ஹெரால்டு என்பது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நாளிதழ் ஆகும். 1937-ம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்(AJL) என்னும் நிறுவனத்தைத் தொடங்கிய நேரு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அதில் பங்குதாரர் ஆக்கினார். 1938-ம் ஆண்டில் இருந்து நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வெளியாகத் தொடங்கியது.

 AJL நிறுவனம் ரூ.5 லட்சம் மூலதனத்தில் உருவாக்கப்பட்டது. இதில், தலா 100 ரூபாய் மதிப்பில் 2 ஆயிரம் பங்குகளும், தலா 10 ரூபாய் மதிப்பில் 30 ஆயிரம் பங்குகளும் பிரிக்கப்பட்டன. மேலும், இந்நிறுவனம் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் சொந்தமானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது.

AJL நிறுவனத்தின் சார்பில் உருது மொழியில் குவாமி அவாஸ் மற்றும் இந்தியில் நவஜீவன் ஆகிய நாளிதழ்கள் வெளியிடப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் நாட்டில் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த தலைவர்களால் வடிவமைக்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. ஆங்கிலேயே ஆட்சிக்கு விமர்சித்து நேரு எழுதிய தலையங்கங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. 

1942-ம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெளியாகத் தொடங்கியது. 1947-ம் ஆண்டு நாடு விடுதலை பெற்றதும் பிரதமராகப் பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைவர் பதவியை நேரு ராஜினாமா செய்தார். சுதந்திரத்திற்குப் பிறகு நடுநிலையாக செயல்படும் எனக் கூறப்பட்டாலும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை காங்கிரசிற்கு ஆதரவாகவே செயல்பட்டது. 

இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னணி ஆங்கில நாளிதழ்களில் ஒன்றாக மாறிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நிதியளித்து வந்தது. நிதி நெருக்கடி காரணமாக 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பிரசுரம் நிறுத்தப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. முன்னதாக, 2010-ம் ஆண்டு AJL நிறுவனத்தின் பங்குதாரர்களின் எண்ணிக்கை 1,057-ஆக குறைக்கப்பட்டது. 

மேலும் படிக்க | நேஷனல் ஹெரால்டு : தொண்டர்களுடன் பேரணியாக வந்து விசாரணைக்கு ஆஜரான ராகுல்காந்தி

கடந்த 2012-ம் ஆண்டு பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சாமி, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகள் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டதாக, டெல்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்ட போது, AJL நிறுவனத்திற்கு காங்கிரஸில் 90 கோடி ரூபாய் கடன் நிலுவை இருந்ததாகவும், பின்னர் 2010-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இந்த கடனை யங் இந்தியா லிமிடெட்(YIL) என்ற நிறுவனத்திடன் வழங்கியதாகவும் சுப்ரமணியன் சுவாமி  அம்மனுவில் கூறியிருந்தார்.

வருமான வரிச் சட்டத்தின் கீழ் எந்த அரசியல் அமைப்பும், மூன்றாம் தரப்பினருடன் நிதி பரிவர்த்தனை செய்ய முடியாது எனக் கூறியிருந்த சுப்ரமணியன் சுவாமி, வெறும் ரூ.50 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பிச் செலுத்தி, யங் நிறுவனம் முறைகேடாக AJL நிறுவனத்தையும், அதற்குச் சொந்தமான ரூ.2,000 கோடி ரூபாய் சொத்துகளைக் கைப்பற்றியதாக சுப்ரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். 

யங் இந்தியா நிறுவனத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தலா 38% பங்குகளை வைத்துள்ளனர். மீதமுள்ள 24% பங்கு காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே ஆகியோரிடம் உள்ளன. இந்த நிறுவனம் முற்றிலும் அறக்கட்டளையாக தொடங்கப்பட்டதெனக் கூறி, நேஷனல் ஹெரால்டு வழக்கில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. 

இவ்வழக்கில் ஜூன் 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி, சோனியா காந்தி உட்பட இவ்வவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. 2015-ம் ஆண்டு இவ்வழக்கில் சோனியா காந்தி, ராகுல்காந்தி இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்ய  உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. பின்னர், 2019-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. கடந்த 7 ஆண்டுகளாக இவ்வழக்கில் பெரிதும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் சம்மன் அனுப்பப் பட்டிருப்பதால் இவ்வழக்கு மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | முன்ஜாமீன் மனு தள்ளுபடி; கைது செய்யப்படுவாரா கார்த்தி சிதம்பரம்?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More