Home> India
Advertisement

Indian Passport இருந்தால் விசா இல்லாமல் இந்த 16 நாடுகளுக்கு செல்லலாம்!!

இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்தை 16 நாடுகள் அனுமதிக்கின்றன, 43 நாடுகள், வந்தபின் விசா பெறும் வசதியை வழங்கியுள்ளன.  அதோடு, 36 நாடுகள் e-visa வசதியை இந்தியர்களுக்கு வழங்குகின்றன என தெரிவித்தார்.

Indian Passport இருந்தால் விசா இல்லாமல் இந்த 16 நாடுகளுக்கு செல்லலாம்!!

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 16 நாடுகள் விசா இல்லாத பயணத்தை (Visa Free Travel) அனுமதிக்கின்றன என்று இந்திய அரசு செவ்வாயன்று மாநிலங்களவையில் அறிவித்தது. வெளியுறவுத் துறை இணை அமைச்சர் (MoS External Affairs) வி.முரளீதரன் மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்தை 16 நாடுகள் அனுமதிக்கின்றன. மேலும், 43 நாடுகள், வந்தபின் விசா பெறும் வசதியை வழங்கியுள்ளன.  அதோடு, 36 நாடுகள் e-visa வசதியை இந்தியர்களுக்கு வழங்குகின்றன என தெரிவித்தார்.

அமைச்சர் அளித்த தகவல்களின்படி, இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்கும் நாடுகள் இவை:

பார்படாஸ்

பூட்டான்

டொமினிகா

கிரெனடா

ஹைட்டி

ஹாங்காங் எஸ்.ஏ.ஆர்

மாலத்தீவுகள்

மொரீஷியஸ்

மொன்செராட்

நேபாளம்

நியு தீவு

செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்

சமோவா

செனகல்

செர்பியா

டிரினிடாட் மற்றும் டொபாகோ

அமைச்சர் அளித்த தகவல்களின்படி, மலேசியா, இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகியவை இந்தியர்களுக்கு இ-விசா வழங்கிய நாடுகளில் அடங்கும்.

ALSO READ: Air Travel தொடங்கினாலும் இந்தியர்களுக்கு இந்த நாட்டில் இப்போதைக்கு No Entry!!

ஒரு குறிப்பிட்ட நாட்டின் பாஸ்போர்ட் இருக்கும் ஒருவரால், பல நாடுகளுக்கு எளிதாக சென்று வர முடிகிறது என்றால், அது அந்த நாட்டு பாஸ்போர்டின் (Passport) சக்தியையும் குறிக்கிறது. பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவருக்கு விசா இல்லாத பயணங்கள் அதிகம் கிடைப்பது, அந்த பாஸ்போர்டிற்கு இருக்கும் அதிக சக்தியை எடுத்துக்காட்டுகிறது.

வழக்கமாக நாட்டின் நன்மதிப்பும், உலக அரங்கில் அந்த நாட்டின் நிலை ஆகியவற்றைப் பொறுத்து சில நாடுகள், மற்ற நாட்டு குடிமக்களுக்கு விசா இல்லாத பயண வசதியை அளிக்கின்றன.

உலகில் அதிகமான நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்கிறது என்றும் முரளீதரன் (Muraleedharan) கூறினார்.

ALSO READ: 6 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கபட்ட தாஜ்மஹால்..!

Read More