Home> India
Advertisement

'விகாசுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’: கான்பூர் வர மறுத்த விகாசின் தாய்

கான்பூர் கொலை வழக்கு பற்றிய செய்தி கிடைத்ததும், தனது மகன் இவ்வளவு பெரிய தவறை உண்மையாக செய்திருந்தால், காவல்துறையினர் அவரைப் பிடித்து என்கௌண்டர் செய்யட்டும் என விகாசின் தாய் ஏற்கனவே கூறி இருந்தார்.

'விகாசுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’:  கான்பூர் வர மறுத்த விகாசின் தாய்

கான்பூர் என்கௌண்டரில் (Encounter) 8 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளி விகாஸ் தூபே(Vikas Dubey), இன்று காலை போலீசாரிடமிருந்து தப்ப முயன்று அவர்களைத்  தாக்க முற்படுகையில், போலீசாரால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். விகாஸ் தூபேவின் சடலம் கான்பூரின் ஹைலட் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், விகாஸ் துபேயின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கான்பூருக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இது குறித்து விகாஸ் துபேயின் தாய் சரளா துபேவிடம் கேட்கப்பட்டபோது, கான்பூருக்கு வர அவர் மறுத்துவிட்டார்.

'எந்த உறவும் இல்லை.....'

விகாஸ் துபேயின் தாய் சரளா துபேவை (Sarla Dubey) கான்பூர் (Kanpur) செல்லுமாறு காவல்துறை கேட்டபோது, சரளா துபே போலீசாரிடம் 'நான் கான்பூருக்கு செல்ல விரும்பவில்லை, விகாசுடன் எனக்கு எந்த உறவும் இல்லை' என்று கூறினார்.

முன்னதாக, கான்பூர் கொலை வழக்கு பற்றிய செய்தி கிடைத்ததும், தனது மகன் இவ்வளவு பெரிய தவறை உண்மையாக செய்திருந்தால், காவல்துறையினர் அவரைப் பிடித்து என்கௌண்டர் செய்யட்டும் என விகாசின் தாய் ஏற்கனவே கூறி இருந்தார். இப்போது விகாஸ் தூபே என்கௌண்டரில் கொல்லப்பட்டுள்ள நிலையிலும், அவரது தாயால் அவர் செய்த கொடூரங்களை மறக்க முடியவில்லை.

ALSO READ: கான்பூரில் என்கவுண்டர் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே… நடந்தது என்ன…

கான்பூரை அடைந்தனர் விகாஸ் துபேயின் மனைவியும் மகனும்

விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே மற்றும் அவரது மகன் கான்பூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இருவரும் வியாழக்கிழமை இரவு லக்னோவில் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரும் இரவில் நீண்ட நேரம் வரை அவர்களிடம் விசாரணை நடத்தினர். காலையில் விகாஸ் துபே என்கௌண்டரில் கொல்லப்பட்ட பின்னர், அவரது மனைவியும் மகனும் கான்பூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். லக்னோவில் இருக்கும் விகாஸ் துபேயின் சகோதரர் மற்றும் அவரது வீட்டின் பாதுகாப்பையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பல மாநிலங்களில் நடந்த தேடுதல் வேட்டை இறுதியாக நேற்று காலை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் (Ujjain) முடிந்தது. உஜ்ஜைன் மஹாகாள் கோயிலிலிருந்து விகாஸ் தூபே பிடிக்கப்பட்டான்.

ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தாலேயே அழிவு ஏற்படும் என்பதற்கு விகாஸ் தூபேவின் வாழ்க்கையே ஒரு உதாரணமாகும்.  

ALSO READ: லக்னோவில் ரவுடி விகாஸ் துபேயின் மனைவி, மகன் மற்றும் வேலைக்காரனை கைது செய்த போலிசார்

Read More