Home> India
Advertisement

திருமண நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் நடனமாடிய முதல் அமைச்சர் -வீடியோ

திருமண நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களுடன் நடமாடிய ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ். வைரலாகும் காணொளி.

திருமண நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் நடனமாடிய முதல் அமைச்சர் -வீடியோ

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரமான ராஞ்சியில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 351 பெண்களுக்கு அரசு சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில் அம்மாநிலத்தின் முதல்-அமைச்சர் ரகுபர் தாஸ் கலந்துக்கொண்டு நிகழ்ச்சிக்கு மணமக்களை வாழ்த்தினார்.

திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு பழங்குடியின மக்கள் நடனம் ஆடினார்கள். அப்பொழுது மேடையில் இருந்து இறங்கி வந்த முதல் அமைச்சர், பழங்குடியின  சமூகத்தை சேர்ந்த மக்களுடன் ஒன்றாக நடனமாடினார். இவர் நடனமாடுவதை பார்த்த மக்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை படுத்தினர்.

பொது மக்களுடன் சேர்ந்து மாநிலத்தின் முதல்-அமைச்சர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (தேதி 24) நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ:-

 

 

ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதில் பட்டியல் பழங்குடி மக்களுக்கு 27 தொகுதிகளும், பட்டியல் சமூகத்திற்கு 9 தொகுதிகளும், பொதுப்பிரிவினருக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல 14 மக்களவை தொகுதிகளில் பட்டியல் பழங்குடி மக்களுக்கு 5 தொகுதிகளும், பட்டியல் சமூகத்திற்கு 1 தொகுதியும், பொதுப்பிரிவினருக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Read More