Home> India
Advertisement

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாளை காலை தொடங்குகிறது!!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாளை காலை தொடங்குகிறது!!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாளை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

தற்போது துணை குடியரசுத்தலைவராக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், குடியரசு துணை தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கய்யா நாயுடுவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிடுகிறார்கள். 

இதற்கான தேர்தல் நாளை காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 7 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று நாட்டின் 14-வது குடியரசு தலைவராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More