Home> Lifestyle
Advertisement

காந்தி ஜெயந்திக்கு இனி ரயிலில் வெறும் சைவ உணவு?

மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட மத்திய ரயில்வே அமைச்சகம் புளூபிரிண்ட் ஒன்றை தயாரித்துள்ளது.  மேலும் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய 3 ஆண்டுகளும் அக்டோபர் 2 அன்று பயணிகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்:- 

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் சைவ தினமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக 2018, 2019 மற்றும் 2020 ஆகிய 3 ஆண்டுகளும் அக்டோபர் 2-ம் தேதி ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு அசைவ உணவு வழங்கக் கூடாது என்றும் அன்றைய தினத்தை "சைவ தினமாக" ரயில்வே ஊழியர்கள் கொண்டாட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரயில்வே அமைச்சகத்தின் இந்த பரிந்துரை ஏற்கப்படும் இனி அக்டோபர் 2 தேசிய தூய்மை தினமாக மட்டுமின்றி, சைவ தினமாகவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. 

Read More