Home> India
Advertisement

Kanpur Encounter: ரவுடி விகாஸ் தூபே பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 2.5 லட்சம் பரிசு

கான்பூர் என்கௌண்டர் (Kanpur Encounter) விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ரவுடி விகாஸ் தூபே பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கான பரிசுத்  தொகையை (Prize Money) உத்திர பிரதேச (UP) யோகி அரசாங்கம் (Yogi Government) 2.5 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

கான்பூரில், வெள்ளியன்று எட்டு போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் விகாஸ் தூபே தலை மறைவாகியுள்ளான்.

ரவுடி (Gangster) விகாஸ் தூபே (Vikas Dubey) பற்றிய தகவல்களை சேகரித்த போலீசார், அவனை பிடிக்க சென்றுகொண்டிருந்தனர். போலிஸ் தன்னை பிடிக்க வருவது குறித்த தகவல்களைத் தெரிந்துகொண்ட விகாஸ் தூபேவும் அவனது கும்பலும் ஒரு சதித்திட்டத்தைத்  தீட்டினர். போலீஸ் வண்டி வரும் பாதையில் ஒரு புல்டௌசரை நிற்க வைத்து, போலீசார் கீழே இறங்கும் வரை காத்திருந்து, அருகில் இருந்த ஒரு வீட்டிலிருந்து அனைத்து போலீசாரையும் சுட்டுக் கொன்றனர்.

ALSO READ: Kanpur Encounter: ரவுடி கும்பலுக்கு தகவல் கொடுத்த காவல் நிலைய அதிகாரி வினய் திவாரி கைது

”உத்திர பிரதேச காவல் துறையின் டைரக்டர் ஜெனரல் ஹெச்.சி.அவஸ்தி, விகாஸ் தூபே பற்றி தகவல் அளிப்பவர்களுக்கான பரிசுத் தொகையை இரண்டரை லட்சமாக அதிகரித்துள்ளார்” என பொது சட்டம் ஒழுங்கின் கூடுதல் இயக்குனர் பிரஷாந்த் குமார் கூறினார்.

கான்பூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கடந்த வாரம் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு உட்பட 8 பொலிஸ்காரர்கள் விகாஸ் துபேயின் குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பிரதான குற்றவாளி துபேயின் ஒரு கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளான். எனினும் முக்கிய குற்றவாளியான விகாஸ் தூபேவை இன்னும் காவல் துறை தேடி வருகிறது. 

ALSO READ: Kanpur Encounter: ரவுடி-போலீசார் மோதல்; DSP உட்பட எட்டு உ.பி. போலீசார் பரிதாபமாக மரணம்

Read More