Home> India
Advertisement

இந்திய பிரதமர் ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார் -ராகுல் காந்தி

UP Election 2022: இந்தியாவின் கோடீஸ்வரர்கள் வேலை கொடுப்பதில்லை, சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகள் தான் வேலையை உருவாக்குகிறார்கள்- ராகுல் காந்தி

இந்திய பிரதமர் ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார் -ராகுல் காந்தி

உ.பி., தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது முன்னாள் நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் இன்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்பொழுது மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசிய அவர், "இந்திய பிரதமர் ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார் என்பது உத்தரபிரதேசம் மக்களுக்கு நன்றாக தெரியும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக வாக்குறுதி அளித்த நரேந்திர மோடி, மூன்று கருப்புச் சட்டங்களை (வேளாண் சட்டங்கள்) அமல்படுத்தியதை நாடு முழுவதும் தெரியும்.

மத்திய அரசு சுற்றி வளைத்த ராகுல் காந்தி:

வேலை வாய்ப்பு பிரச்சினையில் மத்திய அரசை தாக்கி பேசிய ராகுல் காந்தி, "காங்கிரஸின் 70 ஆண்டு கால ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் (பாஜக) கூறுகிறார்கள் என்றால், உண்மையில் இந்த 70 ஆண்டுகளில் அம்பானி, அதானிக்கு எதுவும் நடக்கவில்லை என்று அர்த்தம்" என்றார். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், இந்தியாவின் பெரிய கோடீஸ்வரர்கள் வேலை வழங்குவதில்லை, சிறு கடைக்காரர்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தான் வேலை வழங்குகிறார்கள். 

விவசாயச் சட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, இன்று விவசாயிகளுக்குக் கிடைப்பதை அவர்களிடமிருந்து பறித்து, இந்தியாவின் மிகப்பெரிய 4-5 பில்லியனர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இந்தச் சட்டங்களின் குறிக்கோள் என்று கூறினார்.

மேலும் படிக்க: ’பா.ஜ.க வாழ்நாளில் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது’ - ராகுல்காந்தி

கோவிட் விவகாரத்தில் மத்திய அரசை சுற்றி வளைத்த ராகுல் காந்தி, "பிரதமர் நரேந்திர மோடியும் அவரது நண்பர்களும் இந்தியாவின் வேலைவாய்ப்புத் துறையின் முதுகெலும்பை அழித்துவிட்டனர். இனிவரும் காலங்களில் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது என்பதை நீங்கள் காண்பீர்கள். அவர்களுக்கு (பாஜக) மக்களாகிய நீங்கள் தான் பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

கோவிட் சமயத்தில் நான் சொல்வதை யாரும் கேட்கவில்லை, ஆனால் நீங்கள் கங்கையில் இறந்த உடல்களைப் பார்த்தீர்கள் என மத்திய அரசை கடுமையாக சாடினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியது:

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், "இந்த 5 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது? இதற்கான முழுமையான பட்டியலை நாங்கள் தயாரித்துள்ளோம். அவர்களுக்கு காங்கிரஸ் வேலை கொடுக்கும். இது தவிர 8 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளையும் வழங்குவோம் என்றார்.

பாஜக தவிர, SP மற்றும் BSP ஐயும் குறிவைத்த பிரியங்கா காந்தி, தவறான கட்சியை தேர்வு செய்தால் 5 ஆண்டுகள் வருத்தப்படுவீர்கள் என வாக்காளர்களுக்கு பிரியங்கா எச்சரிக்கை விடுத்தார். பெண்களுக்கு சித்திரவதை நடக்கும் போதோ, அநீதி நடக்கும் போதோ மாயாவதியோ, அகிலேஷோ, யோகி-மோடியோ யாரும் வெளியே வரமாட்டார்கள் எனப் பேசினார்.

மேலும் படிக்க: ’இந்த கேள்விகளுக்கு பிரதமரிடம் பதில் கிடையாது’ - ராகுல் காந்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More