Home> India
Advertisement

Unlock 3 guidelines : இரவு ஊரடங்கு நீக்கம்; ஆகஸ்ட் 5 முதல் ஜிம்களை திறக்க அனுமதி

மூன்றாம் (Unlock 3) கட்ட கட்டுப்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டன. 

Unlock 3 guidelines : இரவு ஊரடங்கு நீக்கம்; ஆகஸ்ட் 5 முதல் ஜிம்களை திறக்க அனுமதி

கொரோனா வைரஸ் நியூஸ்: மூன்றாம் (Unlock 3) கட்ட கட்டுப்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டன. பொது முடக்கத்தில் இருந்த இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு, ஆகஸ்ட் 5 முதல் யோகா (Yoga) நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சிக் (Gymnasiums) கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. அதேநேரத்தில் தரப்படுத்தப்பட்ட வழிமுறைகளை (SOP) பின்பற்றப்பட வேண்டும்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் விரிவான ஆலோசனையின் பின்னர், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் 2020 ஆகஸ்ட் 31 வரை மூடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ சேவைகள் (Metro), சினிமா அரங்குகள் (Cinema Halls) , நீச்சல் குளங்கள் மற்றும் பார்கள் (Bars) மூன்றாவது அன்லாக் கட்டத்தில் தொடர்ந்து மூடப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது. 

ALSO READ | ஊரடங்கில் காய்கறி கடை விரித்த மூதாட்டி… மொத்தமும் வாங்கி கருணை காட்டிய அதிகாரி!

இந்தியாவின் கொரோனா வைரஸ் (Coronavirus in India) வழக்குகள் 15 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி நாட்டின் எண்ணிக்கை 1,531,669 ஆக உயர்ந்தது. நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 34,193 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,512 பாதிப்பும், 768 இறப்புகளும் பதிவாகியுள்ளன. மொத்த எண்ணிக்கையில் 5,09,447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,88,029 பேர் இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

உலகளவில், 16 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 6,55,300 பேர் இறந்துள்ளனர், அதிக எண்ணிக்கையிலான நோய்தோற்று மற்றும் இறப்புகள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன.

ALSO READ | ஆகஸ்ட் முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு? மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்யும் முதல்வர்

சென்னை: இன்று சுகாதரத்துறை வெளியிட்ட செய்தியின் படி, தமிழகத்தில் (COVID-19 in Tamil Nadu) மொத்த கொரோனா (Coronavirus) பாதிப்பின் எண்ணிக்கை 2,34,114 ஆக உள்ளது. அதேநேரத்தில் இன்று 82 பேர் மரணமடைந்து உள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,741 ஆக உள்ளது. அதேநேரத்தில் இன்று 5927 பேர் சிகிச்சை பலனடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரத்தில் இன்று மட்டும் 60,794 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Read More