Home> India
Advertisement

மத்திய அமைச்சர் ரவி சங்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

உடல்நலக்குறைவு ஏற்பட்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இன்று டிஸ்சார்ஜ் ஆனார். 

மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளின் அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த திங்கள்கிழமை இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார்.

இரவு 8 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்த அவர் அங்குள்ள நுரையீரல் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பிரிவில் (Pulmonary Medicine Department) அனுமதிக்கப்படிருந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Read More