Home> India
Advertisement

குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது

குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியப் பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த  நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிப்பார். 

குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.  இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரும்,  மார்ச் 14 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை இரண்டாம் கட்ட கூட்டத் தொடரும் நடைபெற உள்ளது.  குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியப் பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த  நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிப்பார். 

அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும். நாளை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 - 2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Union Budget 2022) தாக்கல் செய்வார். அதன் பிறகு நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெறும்.

ALSO READ | Budget 2022: பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுமா? எதிர்பார்ப்புகள் என்ன?

இந்த, பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சியினர் தீவிரமாக ஆலோசித்து செய்து வருகின்றனர். குறிப்பாக, அண்மையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பெகாசஸ் உளவு விவகாரம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கோவிட் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஷிப்ட் முறையில் செயல்படும் என்றும் நாளின் தனித்தனி நேரங்களில் தலா ஐந்து மணி நேரம் கூடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  மாநிலங்களவை முதல் பாதி நேரத்திலும்,  மக்களவை இரண்டாம் பாதியிலும் கூட உள்ளன .

நாடாளுமன்ற அமர்வுகளின் போது, ​​கோவிட்-19 தொற்றுநோய்க் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, மக்களவை மற்றும் மாநிலங்கள அவையில் உள்ள அறைகள் மற்றும் கேலரிகள் உறுப்பினர்கள் அமர்வதற்குப் பயன்படுத்தப்படும் என்று மக்களவை செய்தி குறிப்பு கூறுகிறது. 

ALSO READ | Budget 2022: மாத சம்பளம் வாங்குவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? நிறைவேற்றுமா அரசு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More