Home> India
Advertisement

மத்திய பட்ஜெட் 2017 இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியால் வழப்படும்

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தல் உள்ளிட்ட சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் 2017 இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியால் வழப்படும்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தல் உள்ளிட்ட சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

இதை தொடர்ந்து 2016-17 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நேற்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி 2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முதல் முறையாக இதில் ரயில்வே பட்ஜெட் நடைமுறை நிறுத்தப்பட்டு, பொதுபட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்படுகிறது. இன்றைய பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரப்பை அதிகரித்தல் உள்ளிட்ட சில சலுகைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Read More