Home> India
Advertisement

விவசாயிகள் போராட்டம்: போலி செய்திகள் மூலம் வன்முறையை தூண்டிய ட்விட்டர் கணக்குகள் முடக்கம்...!!!

போராட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. அதில சுமார் 400 காவல் துறையினர் காயம் அடைந்தனர். அதோடு மட்டுமல்லாமல், போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி தேசத்திற்கே அவமானத்தை தேடித் தந்தனர். 

விவசாயிகள் போராட்டம்: போலி செய்திகள் மூலம் வன்முறையை தூண்டிய ட்விட்டர் கணக்குகள் முடக்கம்...!!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ள பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் 70வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

போராட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணி (Tractor Rally) வன்முறையில் முடிந்தது. அதில் சுமார் 400 காவல் துறையினர் காயம் அடைந்தனர். அதோடு மட்டுமல்லாமல், போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி தேசத்திற்கே அவமானத்தை தேடித் தந்தனர். 

இதை அடுத்து, இரு வேளாண் சங்கங்கள், போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தன.

இந்நிலையில் #ModiPlanningFarmerGenocide  என்ற ஹேஷ்டேக் மூலம் ட்வீட் அல்லது ரீட்வீட்  செய்த கணக்குகளை ட்விட்டர் திங்களன்று முடக்கியது. "போலி செய்திகள், வன்முறையை தூண்டும் ட்வீட்கள்” கொண்ட கணக்குகளை  முடக்குமாறு உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களிடமிருந்து இந்த கோரிக்கை வந்ததை அடுத்து, டிவிட்டர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளந்து.

"தற்போதைய விவசாயிகளின் போராட்டத்தை கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட கணக்குகளில் கேரவன் பத்திரிகையைச் சேர்ந்த ட்விட்டர் (Twitter) கணக்கும் அடங்கும் - டெல்லியில் குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறையின் போது போராட்டக்காரரின் மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாகக் குற்றம் சாட்டி, நேற்று தில்லி காவல்துறை அதன் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது

குடியரசு தினத்தன்று (Republic Day) , செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் மற்றும் டெல்லி காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான மோதல்கள்  ஆகியவற்றை தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு நிலையை பாதுகாக்கும் வகையில், போலி செய்திகளை பரப்பி வன்முறையை தூண்டும் ட்வீட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

ALSO READ | சமூக ஊடகங்களுக்கு விரைவில் கடிவாளம் போடப்படுமா.. உச்ச நீதிமன்றம் கூறியது என்ன..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More