Home> India
Advertisement

போராட்டம் என்ற பெயரில் சாலைகளை ஆக்கிரமிக்க கூடாது: உச்ச நீதிமன்றம்

போராட்டம் காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளதால், நாய்டா பகுதியில் இருந்து தில்லி செல்ல பொதுவாக 20 நிமிடங்களில் கடக்கப்படும் தூரத்தை கடந்து செல்ல 2 மணி நேரம் ஆகிறது.

போராட்டம் என்ற பெயரில் சாலைகளை ஆக்கிரமிக்க கூடாது: உச்ச நீதிமன்றம்

விவசாயிகள் போராட்டம் காரணமாக நொய்டாவிற்கும் டெல்லிக்கும் இடையிலான சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில்,  போக்குவரத்திற்கு திறந்து விடுவது  உறுதி செய்வதற்கான வழிமுறைகளைக் கோரி நொய்டாவில் வசிக்கும் ஒரு பெண் தாக்கல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் போராட்டம் என்ற பெயரில் சாலைகளை ஆக்கிரமிக்க கூடாது என தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான நீதிமன்ற பிரிவு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது

விவசாயிகள் போராட்டம் (Farmers Protest) காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளதால், நாய்டா பகுதியில் இருந்து தில்லி செல்ல பொதுவாக 20 நிமிடங்களில் கடக்கப்படும் தூரத்தை கடந்து செல்ல 2 மணி நேரங்கள் எடுத்துக் கொள்வதால், பெரும் நேர விரயமும், எரி பொருள் விரயம், தேவையற்ற மன உளைச்சல் ஆகியவற்றை எதிர்கொண்டு வருவதாகவும், கூறியுள்ள மனுதாரின் மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை திறக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும்  குறிப்பிட்டது.

பொது மக்கள் பயன்படுத்தும் சாலைகளை அடைக்க கூடாது என உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த போதிலும், அவை பின்பற்றப்படவில்லை என்றும் மனுதாரர் வாதிட்டார்.

ALSO READ | சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியாக்களை நாடு கடத்தலாம்: உச்ச நீதிமன்றம்

"இது கடந்த காலங்களில் நாட்டில் உள்ள சில மக்களால் பொது இடங்களில் மட்டுமல்ல, அதிகம் போக்குவரத்து உள்ள சாலைகளில் 'போராட்டம்' செய்வது ஏன் ஒரு பழக்கமாக மாறி விட்டது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என மனுதாரர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். 

விசாரணையின் போது உச்ச நீதிமன்றம், "பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளை அடைக்கக்கூடாது. நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளில் இந்த அம்சம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது." என கூறியுள்ளது.

அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா , தில்லி அரசாங்கத்தின் சார்பில் ஆஜராகியுள்ளதாக கூறியதோடு, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா அரசாங்கத்தையும் இந்த வழக்கில் இணைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி கவுல், "அரசியல் ரீதியாகவோ, நிர்வாக ரீதியாகவோ அல்லது நீதித்துறை ரீதியாகவோ இந்த பிரச்சினையை நீங்கள் எவ்வாறு தீர்ப்பீர்கள் என்பதில் எங்களுக்கு அக்கறை இல்லை. சாலைகள் அடைக்கப்படக் கூடாது என்பதை நாங்கள் முன்பே வலியுறுத்தியுள்ளோம்" என்று கூறினார்.

"இது கடந்த காலங்களில் நாட்டில் உள்ள சில மக்களால் பொது இடங்களில் மட்டுமல்ல, அதிகம் போக்குவரத்து உள்ள சாலைகளில் 'போராட்டம்' செய்வது ஏன் ஒரு பழக்கமாக மாறி விட்டது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என மனுதாரர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இந்த மனுவின் மீதான அடுத்த விசாரணை, ஏப்ரல் 19 ம் தேதி மேற்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் கூறியது.

ALSO READ | சட்ட விரோத குடியேறிகளின் தலைநகராக இந்தியா இருக்க முடியாது: மத்திய அரசு 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More