Home> India
Advertisement

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு - கைதாவாரா லாலு!

2G வழக்கு மற்றும் ஆதர்ஷ் வழக்கு போன்றவற்றில் நியாயமான தீர்ப்புகள் கிடைத்திருப்பதைப் போல...

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு - கைதாவாரா லாலு!

ரான்சி: லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி மீதான கால்நடைத் தீவன வழக்கில், ரான்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது!

பீகார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்தபோது கால்நடைத் தீவனம் வாங்கியதில், அரசு கருவூலத்தில் இருந்து 84 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. 

முன்னதாக, தீர்ப்பின் தேதி அன்று லாலு மற்றும் அவரது மகன் தேஜஸ்வி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது, இதனால் இருவரும் இன்று ரான்சி விரைந்தனர். வெளியாகும் தீர்ப்பு பாதகமாகும் பட்சத்தில் இருவரும் கைதாக வாய்ப்புள்ளது.

இதனிடையே, ராஞ்சியில் செய்தியாளர்களை சந்தித்த லாலுபிரசாத் தெரிவித்ததாவது... 

"2G வழக்கு மற்றும் ஆதர்ஷ் வழக்கு போன்றவற்றில் நியாயமான தீர்ப்புகள் கிடைத்திருப்பதைப் போல, தம்மை விடுவிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கும்" என தெரிவித்துள்ளார்!

Read More