Home> India
Advertisement

இனிமேல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட சாத்தியமே இல்லை: இஸ்ரோ தலைவர் சிவன்

தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்!!

இனிமேல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட சாத்தியமே இல்லை: இஸ்ரோ தலைவர் சிவன்

தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்!!

சந்திரயான் 2 நாளை விண்ணில் பாயும் என்றும் இனிமேல் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்படாது என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆம் தேதி சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்டவுன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை பிற்பகல் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்; சந்திரயான் 2 நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் வெற்றகரமாக ஏவப்படும் என்று குறிப்பிட்டார். இதற்கான கவுண்டவுன் இன்று மாலை 6.43 மணிக்கு தொடங்குகிறது. சந்திரயான் 2 விண்கலத்தை ஏந்தி செல்லும் GSLV மார்க் 3 ராக்கெட் முழுவதும், ஒன்றை நாட்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. பின்னர் அதிலிருந்த கோளாறு கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு விட்டது. அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

மேலும், சந்திரயான் 2 எப்போது விண்ணில் ஏவப்படும் என்று உலக அளவில் அறிவியலாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இனிமேல் சந்திரயான் 2 விண்கலத்தில் எந்தவித தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்படாது. சந்திரயான் 2 பாதுகாப்பாக, வெற்றிகரமாக விண்ணில் ஏவும் பட்சத்தில் உலக அளவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தனித்துவமான பெருமையை பெறும்" என்று அவர் தெரிவித்தார். 

 

Read More