Home> India
Advertisement

வீல்சேர் பற்றாக்குறை... 80 வயது பயணி இறந்த சோகம்... ஏர் இந்தியாவுக்கு DGCA நோட்டீஸ்!

மும்பை விமான நிலையத்தில், 80 வயது பயணி ஒருவர், சர்க்கர நாற்காலி கிடைக்காத நிலையில், விமானத்திலிருந்து டெர்மினலுக்கு நடந்து செல்லும் போது, கீழே விழுந்து இறந்தார்.

வீல்சேர் பற்றாக்குறை... 80 வயது பயணி இறந்த சோகம்... ஏர் இந்தியாவுக்கு DGCA நோட்டீஸ்!

DGCA Has Sent Notice to Air India: வீல் சேர் என்னும் சர்க்கர நாற்காலி பற்றாக்குறை காரணமாக, 80 வயது பயணி ஒருவர் இறந்த விவகாரத்தில், டாட்டா குழும விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, (Air India) விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பை விமான நிலையத்தில், 80 வயது பயணி ஒருவர், சர்க்கர நாற்காலி கிடைக்காத நிலையில், விமானத்திலிருந்து டெர்மினலுக்கு நடந்து செல்லும் போது, கீழே விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க்கில் இருந்து மும்பை வந்த பயணிக்கு நேர்ந்த சோகம்

கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி நியூயார்க்கில் இருந்து AI 116 விமானத்தில் (Air India), 80 வயதான பாபு பட்டேல் என்பவர், தனது மனைவி நர்மதா படேல் உடன் மும்பை வந்தார். பயணிகள் இருவருக்குமே சர்க்கர நாற்காலிகள் தேவை என்று முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்க்கர நாற்காலிகளின் தேவை அதிகம் இருந்ததால், பயணிகள் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சர்க்கர நாற்காலிக்காக காத்திருந்த நிலையில், ஒரே ஒரு வீல் சேர் மட்டுமே கிடைத்ததால், அதில் தன் மனைவியை அமர வைத்து, உதவியாளருடன் தான் நடக்கத் தொடங்கினார். ஆனால் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்த பின், அவர் நெஞ்சுவலி யில் மயங்கி கீழே விழுந்தார். இமிகிரேஷன் (Immigration) என்னும் குடியிறக்க பிரிவை அடையும் போது இந்த நிலை ஏற்பட்டது. உடனே அவர் நானாவதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பட்டபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

விமான நிறுவனம் ஏழு நாளுக்குள் பதிலளிக்க உத்தரவு

சர்க்கர நாற்காலி விவகாரம் தொடர்பாக, ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வீல் சேர் தேவைப்படும் பயணிகளுக்கு, போதுமான எண்ணிக்கையிலான சர்க்கர நாற்காலிகளை, இருப்பில் வைத்துக் கொள்வதை உறுதி செய்யுமாறு, விமான நிறுவனங்கள் அனைத்திற்கும், விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (The Directorate General of Civil Aviation) கேட்டுக் கொண்டுள்ளது. நடக்க முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் இயக்க பாதிப்பு உள்ளவர்கள் போன்றவர்களுக்கு உதவும் வகையில் சர்க்கரை நாற்காலிகள் வழங்கப்பட வேண்டும் என்று விதி உள்ளதாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியல்! தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?

விமான நிறுவனம் அளித்துள்ள விளக்கம்

இந்த சம்பவம் குறித்து விமலுக்கும் அளித்த ஏர் இந்தியா நிறுவனம், அன்றைய தினத்தில் சர்க்கர நாற்காலியின் தேவை அதிக அளவு இருந்ததால், தேவையான பயணிகள் சிறிது காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது என்றும், ஒரு சக்கர நாற்காலி கிடைத்தவுடன், தன் மனைவியை அமர வைத்து விட்டு, தான் நடந்த செல்ல 80 வயதான பாபு பட்டேல் முடிவு செய்ததாகவும் கூறியது. பயணி மயங்கி விழுந்ததுமே, மருத்துவர் வரவழைக்கப்பட்டு, சிபிஆர் வழங்கவும் மருத்துவமனையில் அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டு, நானாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என அறிவித்ததாகவும் விமான நிறுவனம் கூறியது.

மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More