Home> India
Advertisement

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் - ராகுல் காந்திக்கு நீதிபதி அதிரடி உத்தரவு

வரும் 30 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என மும்பையின் தானே நீதிமன்றத்தில் உத்தரவு பிறபித்துள்ளது.

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் - ராகுல் காந்திக்கு நீதிபதி அதிரடி உத்தரவு

கர்நாடகாவில் "பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் அவருக்கு பல மிரட்டல்கள் தொடர்ந்து வந்துக்கொண்டு இருந்தது. 

இந்தநிலையில், கடந்த 2017 ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. 

கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எழுத்தாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தொடர்புள்ளது எனவும் கூறியிருந்தார்.

ராகுல் காந்தி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி தானே நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராக ராகுல்காந்தி பேசியுள்ளார் என மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராகுல் காந்தி வரும் 30 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Read More