Home> India
Advertisement

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நிலை பாதிப்பு காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தனது இடது கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

கை, தோள்பட்டைகளில் வலி இருந்ததினால் அவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட கோளாறு ஏதேனும் இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர்.

அங்கு அவருக்கு நவீன பரிசோதனை முறையான இரத்த நாளங்களினுள் கேமரா செலுத்தி பாதிப்பை கண்டுபிடிக்கும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சிடி ஸ்கேன் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனையில் முதல்வர் சந்திரசேகர் ராவ்வின் மனைவி சோபா, மகள் கவிதா, பேரன் ஹிமான்சூ, அமைச்சர் ஹரிஸ் ராவ் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் படிக்க | ஒரே நாடு ஒரே தேர்தல் வராது, அதற்கு வாய்ப்பே இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

முதல்வர் சந்திரசேகர் ராவ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரும், தொண்டர்களும் மருத்துவமனையின் முன்பு குவிந்தனர். 

fallbacks

மருத்துவரை சந்தித்த பிறகு சந்திரசேகர் ராவின் குடும்பத்தினர் கட்சி உறுப்பினர்களை சந்தித்து  கவலைப்பட தேவையில்லை, இரண்டு நாட்களாக இடது கை கால்களில் வலி இருப்பதாக கூறினார். அதனால் முன்னதாகவே பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

fallbacks

முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது அலுவல் ரீதியான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மோலும் படிக்க | நண்பர் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள்; 10 ஆண்டில் பெரிய சாதனை: பாராட்டிய கமல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More