Home> India
Advertisement

நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆகஸ்ட் 9 வழக்கு ஒத்திவைப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆகஸ்ட் 9 வழக்கு ஒத்திவைப்பு

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மாபா.பாண்டியராஜன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியலமைப்பு சட்டத்தின், 212-வது பிரிவின் கீழ், சட்டசபை தொடர்பான விவகாரத்தில் கோர்ட் தலையிடக்கூடாது என மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதாடினார். 

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டிற்கு சட்ட உதவி செய்ய மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் நியமிக்கப்பட்டார். அவர் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து, வழக்கு ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read More