Home> India
Advertisement

பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக அரசுக்கு ஒரு நாள் கெடு...

மகாராஷ்டிராவில் நவம்பர் 27-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!

பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக அரசுக்கு ஒரு நாள் கெடு...

மகாராஷ்டிராவில் நவம்பர் 27-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிராக NCP-காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டாக தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று வாசித்தது.

நீதிபதிகளின் அதிரடி தீர்ப்பின் படி மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நவம்பர் 27-ஆம் தேதி (நாளை) நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

நவம்பர் 27-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சட்டசபை நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா-NCP-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக ஆஜரான கபில் சிபல், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பானது, திறந்த ரகசிய வாக்கெடுப்பு முறையில் இருக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது; நாளை மாலை 5 மணிக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டிய நிலையில், வாக்கெடுப்பு நடத்த சார்பு சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை(23.11.2019) அதிகாலை ஏற்பட்ட திடீர் வளர்ச்சியில், தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகவும், NCP தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

இதனையடுத்து பாஜக-அஜித் பவார் கூட்டணியில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவசேன மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

நீதிபதி NV ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது சிவசேனா, காங்கிரஸ் சார்பில் கபில் சிபல், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி, பாஜக சார்பில் முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகினர். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று (நவம்பர் 26) இவ்வழக்கு தொடர்பான உத்தரவினை அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வெளியாகியுள்ளது.

Read More