Home> India
Advertisement

Article 370 தொடர்பான மனுக்களை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

நீதிபதி N V ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், செவ்வாயன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கத் தொடங்க உள்ளது. 

Article 370 தொடர்பான மனுக்களை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

நீதிபதி N V ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், செவ்வாயன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கத் தொடங்க உள்ளது. 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் மத்திய அரசு விதித்ததாகக் கூறப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் உணவு, மருந்துகள் போன்ற அடிப்படை வசதிகளுக்கான அணுகல் தடை குறித்த தனிப்பட்ட மனுக்களையும் இந்த பெஞ்ச் விசாரிக்கும் என தெரிகிறது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. மேலும் ஜம்மு - காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் உத்தரவு பிறப்பித்தது.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, தேசிய மாநாட்டு கட்சி சார்பிலும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் அமைப்புகள் சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

'ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். 'காவல்துறையினர் கைது செய்துள்ள அரசியல் கட்சி தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்' என, அந்த மனுக்களில் கூறப்பட்டுஇருந்தது.'இந்த மனுக்களை, நீதிபதி, N V ரமணா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், நேற்றைய தினம் இந்த மனுக்கள் மீண்டும் பரிசீலனைக்கு வந்தது, அப்போது, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டதாவது: அயோத்தி வழக்கை தினமும் விசாரிக்க வேண்டியுள்ளதால், ஜம்மு - காஷ்மீர் தொடர்பான மனுக்களை விசாரிக்க முடியவில்லை. ஜம்மு - காஷ்மீர் தொடர்பான மனுக்களை, நீதிபதிகள், NV ரமணா, SK கவுல், R சுபாஷ் ரெட்டி, BR கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் விசாரிக்கும் என உத்தரவிட்டார்.

Read More