Home> India
Advertisement

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலால் சிக்கலில் சிக்குமா உலக வர்த்தகம்?

உலகளாவிய கப்பல் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் சிக்கியுள்ள கப்பலால் ஏற்பட்ட நெரிசலை சரி செய்ய நான்கு அம்ச திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இந்திய அரசு இன்று (மார்ச் 27) தெரிவித்தது. 

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலால் சிக்கலில் சிக்குமா உலக வர்த்தகம்?

புதுடெல்லி: சூயஸ் கால்வாயில் பக்கவாட்டில் சிக்கியுள்ள கப்பலால் உலகே பதட்டத்திலும் பரபரப்பிலும் உள்ளது. கப்பல் சிக்கினால் ஏன் பரபரப்பு என நினைப்பவர்களுக்கு..... சிக்கியுள்ளது கப்பல் மட்டுமல்ல, உலக பொருளாதாரத்தின் ஒரு பிரிவும் கப்பலுடன் சேர்ந்து சிக்கியுள்ளது. இது சதியா, தற்செயலாக நடந்த விஷயமா, அல்லது வரப்போகும் பெரிய நடவடிக்கைக்கான முன்மொழிவா என பலர் வியப்பில் உள்ளனர்.  

சீனாவிலிருந்து (China) நெதர்லாந்தின் துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்கு இந்த கப்பல் சென்றபோதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த கப்பலில் உள்ள ஊழியர்கள் 25 பேர் இந்தியர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சரக்கு கப்பல்கள் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக சூயஸ் கால்வாயின் குறுகிய பாதையை ஒவ்வொன்றாகக் கடக்கின்றன. உதாரணமாக, சிறிய சாலை வழிகளில் வாகனங்கள் ஒவ்வொன்றாக செல்வதுபோல, இந்த கால்வாயில் கப்பல்கள் ஒவ்வொன்றாக செல்வது வழக்கம்.   கடந்த செவ்வாய்க்கிழமை, இந்த பகுதியில் கடும் மணல் புயல் வீசியுள்ளது. இதனால் கப்பல் மாலுமிகளால் வழியை கூட சரியாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. கடுமையாக வீசிய புயல் காற்றிலிருந்து கப்பலை காப்பாற்ற மாலுமி முயன்றாரே தவிர கப்பல் செல்லும் வழியை கண்காணிக்காமல் விட்டுவிட்டார். இதனால் கப்பல் மணல் பரப்பில் சிக்கியுள்ளது.

உலகளாவிய கப்பல் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் சிக்கியுள்ள கப்பலால் ஏற்பட்ட நெரிசலை சரி செய்ய நான்கு அம்ச திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இந்திய அரசு இன்று (மார்ச் 27) தெரிவித்தது. 

சூயஸ் கால்வாயில் (Suez Canal) சிக்கியுள்ள கப்பலால் எற்பட்டுள்ள சிக்கலான நிலைமையால் ஏராளமான கப்பல்கள் கேப் ஆஃப் குட் ஹோப் வழியாக போக வேண்டிய நிலைமை உள்ளது. சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள மில்லியன் டன் அளவிலான சரக்குகளில் அனைவரையும் வருத்தப்பட வைக்கும் விஷயம் அதில் விலங்குகளை சுமந்து சென்று கொண்டிருந்த கார்கோவும் சிக்கியுள்ளதுதான். 

வெள்ளிக்கிழமை வர்த்தகத் துறை, தளவாடங்கள் பிரிவு கூட்டிய கூட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் (Indian Government) சார்பில் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இந்தத் திட்டத்தில் கார்கோக்களை முன்னுரிமைப் படுத்துவது, சரக்கு விகிதங்கள், துறைமுகங்களுக்கான ஆலோசனை மற்றும் கப்பல்களை மாற்று வழிகளில் அனுப்புவது ஆகியவை உள்ளன. 

ALSO READ: 'Sorry!':பிரதமர் மோடியின் உரையை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்டார் சஷி தரூர்

193 கி.மீ நீளமுள்ள கால்வாய் மத்தியதரைக் கடலை செங்கடலுடன் இணைக்கிறது. ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய கடல் இணைப்பை இது வழங்குகிறது. அறிக்கையின்படி, செவ்வாயன்று சூயஸ் கால்வாயில் 224,000 டன் கொள்கலன் கொண்ட கப்பல் சிக்கி நீர்வழிப்பாதையில் போக்குவரத்தை முற்றிலுமாக தடுத்துள்ளது.

இதன் காரணமாக பல சரக்கு கப்பல்கள் அந்த பாதையை கடந்து செல்ல முடியாமல் நிற்கின்றன. இவற்றில், எண்ணெயைக் கொண்டு செல்லும் கப்பல்கள் முதல் நுகர்வோர் பொருட்களை ஏற்றிச்செல்லும் கப்பல்கள் வரை பல வித கப்பல்கள் உள்ளன. 

சூயஸ் கால்வாயில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலால், உலக வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பாதை, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்தும், அந்த பகுதிகளுக்கும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதி / இறக்குமதிக்கு பயன்படுத்தப்படுகிறது என்று அமைச்சகம் மேலும் வெளிப்படுத்தியது.

கடைசி புதுப்பிப்புகளின்படி, சிக்கிய கப்பல் இன்னும் அதே நிலையில்தான் உள்ளது. டக்போட்கள் மற்றும் அகழி கருவிகள் வைத்து அதை நகர்த்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கப்பல் எப்போது நகர்ந்ததப்படும், பாதை எப்போது சரியாகும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ALSO READ: சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பலால் உலக வர்த்தகம் ஸ்தம்பிக்கும் அபாயம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More