Home> India
Advertisement

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2 உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2 உயர்வு

இந்த விலை உயர்வால் மானிய விலையிலான 14.2 கிலோ சிலிண்டர் டெல்லியில் ரூ.425.06 இருக்கும். இதற்கு முன்பு ரூ.423.09-ககா இருந்தது. கடந்த  ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.1.93 உயர்த்தப்பட்டது.

டீசலுக்கான மானிய சுமையிலிருந்து அரசு வெளிவந்த வழியைப் பின்பற்றி மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு மானிய சுமையிலிருந்து வெளியேற சமீபத்தில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி மாதம் 2 ரூபாய் அளவில் சமையல் எரிவாயுவுக்கான விலையை உயர்த்துவது என்கிற முடிவை எடுத்துள்ளது.

மானியம் அல்லாத சமையல் எரிவாயுவின் தற்போதைய டெல்லி விலை ரூ. 466.50 ஆக உள்ளது. இதற்கு முன்பு ரூ.487 ஆக இருந்தது.

சிட்டி விலை
டெல்லி 425.06
கொல்கத்தா 427.06
மும்பை 452.53
சென்னை 412.56
Read More