Home> India
Advertisement

கேரளா: பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

இன்று முதல் அடுத்த 41 நாட்களுக்கு மண்டலம் பூஜைக்கு சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. 

கேரளா: பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலம் மகரவிளக்குப் பூஜைக்காக வரும் நேற்று மாலை முதல் அடுத்த 41 நாட்களுக்கு சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. சாமியே சரணம் ஐயப்பா, சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோசத்துடன் நடை திறக்கப்பட்டது. இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நடை பூஜை டிசம்பர் 27 ஆம் தேதியுடன் நிறைவடையும். இரண்டு நாள் கழித்து அடுத்து மண்டலம் பூஜைக்கு நடை திறக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அன்று முதல் இன்று வரை பதற்றமான சூழல் நிலவுகிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள் முதலே பல்வேறு கட்சிகளும், இந்து அமைப்புக்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது மீண்டும் கேரளா முழுவதும் போராட்ட களமாய் உருமாறியுள்ளது.

போராட்டங்களால் கேரளா முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளதால் சபரிமலையில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட கோயிலை சுற்றிய பல பகுதிகளில் 144 தடை உத்தரவினை கேரளா காவல்துறையினர் பிறப்பித்துள்ளனர். 

Read More