Home> India
Advertisement

ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!

நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு தினத்தில் அவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்

ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!

நமது நாட்டிற்கு தேசிய கீதத்தை அளித்த திரு ராவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஒரு கவிஞர்மட்டுமல்ல இசைக்கலைஞர், எழுத்தாளர் மற்றும் ஒரு ஓவியரும் கூட. அவர் இந்திய இலக்கியம், இசை மற்றும் கலை ஆகியவற்றிற்கு அரும்  பங்களிப்பை கொடுத்துள்ளார். 

இவர், 1913 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.  இந்த விருதினால் கவுரவிக்கப்பட்ட முதல் இந்தியஎர் என்பதோடு,  இந்த விருதை பெற்ற ஐரோப்பியர் அல்லாத முதல் நபர் என்ற பெருமையும் உண்டு. 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவர் காலமானார். 

இன்று அவரது 79 வது  நினைவு நாளில், அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ | Kisan Rail: விவசாயிகளுக்கான முதல் AC சரக்கு ரயில் சேவை ஆகஸ்ட் 7 தொடங்குகிறது

1.  3 நாடுகளுக்கு தேசிய கீதங்களை வழங்கியவர் 

தாகூர் இந்தியாவிற்கு, அதன் தேசிய கீதமான ‘ஜன-கண-மன’ பரிசளித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், அவர்  இந்தியா மட்டுமல்ல,  மூன்று நாடுகளுக்கு தேசிய கீதத்தை கொடுத்துள்ளார் என்பது பலருக்குத் தெரியாது. இந்தியாவின் ‘ஜன கன மண’ முதல் பங்களாதேஷின் ‘அமர் சோனா பங்களா’ , இலங்கையின் தேசிய கீதம் ஆகியவை தாகூரின் கவிதையை அடிப்படையாகக் கொண்டது.

2. தாகூர்  பயணம் செய்வதை மிகவும் விரும்புபவர்

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐந்து தசாப்தங்களில் ஐந்து கண்டங்களில் உள்ள 30 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவர் பயணம் செய்தார்.

3. உலகளவில் புகழ் பெற்றிருந்தார்

ஒவ்வொரு முறையும் ரவீந்திரநாத் தாகூர் ஒரு புதிய நாட்டிற்கு பயணம் செய்தபோது, ​​அவர் தனது நாட்டிற்கு வருகை தந்ததற்காக அவரது விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்கு அந்நாட்டு அரசு ஆயிரக்கணக்கான டாலர்களை  பரிசாக அளிக்கும்.

ALSO READ | Beirut போலவே மும்பையில் 76 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் பற்றி தெரியுமா..!!!

4. 2000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர்

இசையை நேசிப்பவராக இருந்த தாகூர்  2,000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார்.  இப்போது ரவீந்திர சங்கித் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் பல உலகெங்கிலும் அவர் மேற்கொண்ட பயணங்களால் ஈர்க்கப்பட்டு எழுதிய பாடல்களாக உள்ளன.

5. தேசத்தின் தந்தைக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தை வழங்கினார்

மகாத்மா காந்திக்கும் தாகூருக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், இருவருக்கு இடையில் நல்ல உறவு இருந்தது.  மேலும் ரவீந்திர நாத் தாகூர்  தான் தேசத்தின் தந்தைக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தை வழங்கினார் என்பது பலருக்கும் தெரியாது. மகாதமா காந்திக்கு தாகூருக்கும் இடையிலான உரையாடல், நவீன இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையிலான தத்துவ ரீதியாக  ஆக்கபூர்வமான விஷயங்களை கொண்டுள்ளன.

6. நோபல் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பதுடன் முதல் ஐரோப்பியரல்லாதவர் என்ற பெருமையும் உண்டு

தாகூர் சதுரங்கா, ஷேஷர் கோபிடா, சார் ஓடே மற்றும் நவுகாதுபி போன்ற பல நாவல்களை எழுதியுள்ளார். கீதாஞ்சலி என்ற அவரது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்ட பின்னர், 1913 ஆம் ஆண்டில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம் நோபல் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பதுடன் முதல் ஐரோப்பியரல்லாதவர் என்ற பெருமையைப் பெற்றார்.

7. அவரது நோபல் பரிசு திருடப்பட்டது

2004 ஆம் ஆண்டில், தாகூரின் நோபல் பரிசு பதக்கம் சாந்தி நிகேதனிலிருந்து திருடப்பட்டது. இதையடுத்து, ஸ்வீடிஷ் அகாடமி அவருக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி ஆகியவற்றினால் ஆன விருதின் இரண்டு பிரதிகளை மீண்டும் வழங்கியது.

8. அவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை 4 சந்தர்ப்பங்களில் சந்தித்தார்

ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோர் 1930 மற்றும் 1931 க்கு இடையில் நான்கு முறை சந்தித்து ஒருவருக்கொருவர் பங்களிப்புக்காக ஒருவருக்கொருவர் மதித்தனர்.

Read More