Home> India
Advertisement

Shiv Sena தலைவர் Uddhav Thackeray நவம்பர் 17 அன்று முதல்வராக பதவியேற்கலாம்

சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க நேரம் கேட்டதற்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் (Bhagat Singh Koshyari) நிராகரித்து உள்ளார்.

Shiv Sena தலைவர் Uddhav Thackeray நவம்பர் 17 அன்று முதல்வராக பதவியேற்கலாம்

மும்பை: மகாராஷ்டிரா அரசியல் நடைபெற்று வந்த நாடகம் முடிவு பெரும் நிலைக்கு வந்து விட்டது. மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க சிவசேனா, என்.சி.பி. கூட்டணிக்கு ஆதரவு வழங்குவது என காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து சிவசேனா நிறுவனர் பாலாஷாகேப் தாக்கரேவின் ஏழாவது இறப்பு நாளான நவம்பர் 17 அன்று உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்கலாம். சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்சிகள் சிவாஜி பூங்காவில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி, சிவசேனா தலைமையில் மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான அவகாசத்தை அளிக்க, ஆளுநர் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போனில் ஷரத் பவருடன் பேசியுள்ளார். அதன் பின்னர் தனது மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் பேசிய விட்டு சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்த காங்கிரஸ் தரப்பில் 43 வார்த்தை கொண்ட ஒரு அறிக்கை வெளியிட்டப்பட்டது. 

காங்கிரஸ் கட்சியின் ஆதரவை அடுத்து சிவசேனா தலைவரின் மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் மற்ற கட்சித் தலைவர்களுடன், ஆளுநர் கோஷ்யாரியைச் சந்திக்க ராஜ் பவனுக்கு சென்றனர். ஏனெனில் அரசாங்கத்தின் காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ளது.

ராஜ் பவனுக்கு சென்ற சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமைக் கூறியது. மேலும் பதவியேற்க 48 மணிநேர கால நீட்டிப்பைக் கோரியுள்ளது. ஆனால் அவர்களின் கோரிக்கைகளை, அம்மாநில ஆளுநர் பகத் சிங் (Bhagat Singh Koshyari) நிராகரித்து உள்ளார்.

இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read More