Home> India
Advertisement

NCP தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சரத் பவார்!

மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் சரத் பவார் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

NCP தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சரத் பவார்!

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்துள்ளார். மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் மையத்தில் இன்று அவரது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த சரத் பவார், நான் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கூறினார். இதற்கிடையில், சரத் பவாரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஜெயந்த் பாட்டீல் கண்ணீருடன் பவாரிடம் இந்த முடிவை திரும்பப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். சரத் ​​பவார் காங்கிரஸில் இருந்து விலகி 1999ல் என்சிபியை உருவாக்கினார். சமீபத்தில், அவர் சூசகமாக, சப்பாத்தி செய்யும் போது, சப்பாத்தியை சரியான நேரத்தில் திருப்பவில்லை என்றால் கருகி விடும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு யாராவது பொறுப்பேற்க வேண்டும்: பவார்

மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் சரத் பவார் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். சரத் ​​பவார் கூறுகையில், 'நீண்ட காலம் கட்சியை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் பல ஆண்டுகளாக தலைவர் பதவியை வகித்து வந்தேன். இந்த பொறுப்பை வேறு யாராவது ஏற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது நான் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். NCP தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் ராஜினாமா செய்வதாக அறிவித்தவுடன், NCP கட்சியின் பெரிய தலைவர்கள் அனைவரும் கைகளை கூப்பி அவரை சமாதானம் செய்ய ஆரம்பித்தனர். அப்போது, ​​பவாருக்கு ஆதரவாக ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். சமீபத்தில், மகாராஷ்டிராவில் என்சிபி இளைஞர் பிரிவின் நிகழ்ச்சி ஒன்றில், சரத் பவார், தலைமை மாற்றத்திற்கான சரியான நேரம் இது என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார். ஷரத் பவார் ஓய்வு பெறுவதாக அறிவித்தவுடன், மண்டபத்தில் நின்றிருந்த தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க |  ராகுல் காந்தி Vs பிரதமர் மோடி: தேர்தல் என்பது உங்களைப் பற்றி பேசுவது அல்ல.. மக்களை பற்றி பேசுவது

புதிய தலைவரை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது

சரத் பவாரின் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் திலீப் வால்ஸ் பாட்டீல் மற்றும் நர்ஹரியும் உள்ளனர். இந்த குழுவின் முடிவு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும் என்று அஜித் பவார் கூறியுள்ளார். எனினும், சரத் ​​பவாரை சம்மதிக்க வைக்க என்சிபி முயற்சி மேற்கொண்டு வருகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், பவார் இல்லாமல் நாங்கள் எப்படி மக்களிடம் செல்வோம். ஜெயந்த் பாட்டீல் அழுது கொண்டே, ‘சரத் பவார் தலைவராக நீடிக்க வேண்டும், அது கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் அவசியம். உங்கள் இடத்தை வேறு யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது. கட்சியில் நீங்கள் விரும்பும் மாற்றங்களைச் செய்யுங்கள் ஆனால் தலைவர் பதவியை விட்டு செல்லாதீர்கள். உங்கள் இந்த முடிவு யாருடைய நலனையும் கருத்தில் கொள்ளாத முடிவு. புதிய தலைமுறைக்கு உங்கள் வழிகாட்டுதல் தேவை’ என்றார்.

'சப்பாத்தியைத் திருப்பவில்லை என்றால் கருகி விடும்'

சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் நடந்த என்சிபி இளைஞர் காங்கிரஸின் இளைஞர் சங்கல்ப நிகழ்ச்சியில் பவார்,  ‘சப்பாத்தியை தயாரிக்கும் போது, கல்லில் அதனை திருப்ப வேண்டும், அதை சரியான நேரத்தில் திருப்பாமல் தாமதப்படுத்துவது பலனளிக்காது. சப்பாத்தி கருகி விடும் என்றார். சில நபர்களுக்கு சமூகத்தில் எந்த இடமும் இல்லாமல் இருக்கலாம், அவர்கள் தொண்டர்களிடையே மதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பதவி இருக்கிறதோ இல்லையோ. அந்த மரியாதையைப் பெற, நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.

மேலும் படிக்க | இலவச காஸ் சிலிண்டர்... தினமும் அரை லிட்டர் நந்தினி பால்... பாஜக தேர்தல் அறிக்கை!

அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படுபவர் சரத் பவார்

இந்த நிகழ்ச்சியின் போது சரத் பவார், யாரை மேலே கொண்டு வர வேண்டும் என்று சிந்தியுங்கள். நகராட்சி தேர்தலில் அமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் புதிய தலைமை உருவாகும் என்றார். அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படுபவர் சரத் பவார். அவர் சூசகமாக தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் திறன் பெற்றவர் என்று நம்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாகவும் பவார் தான விலகுவது குறித்து சூசகமாக தகவல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | காங்கிரஸ் என் மீது 91 முறை அவதூறுகளை வீசியுள்ளது... ஆனால்... கர்நாடகாவில் பிரதமர் மோடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More