Home> India
Advertisement

இந்தியாவின் Covid தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க WHO அனுமதி!

உலகம் முழுவதும் அவசரகால பயன்பாட்டிற்காக அஸ்ட்ராஜெனிகா / ஆக்ஸ்போர்டின் COVID-19 தடுப்பூசியின் 2 பதிப்புகளுக்கு WHO ஒப்புதல் அளித்துள்ளது..!

இந்தியாவின் Covid தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க WHO அனுமதி!

உலகம் முழுவதும் அவசரகால பயன்பாட்டிற்காக அஸ்ட்ராஜெனிகா / ஆக்ஸ்போர்டின் COVID-19 தடுப்பூசியின் 2 பதிப்புகளுக்கு WHO ஒப்புதல் அளித்துள்ளது..!

உலக சுகாதார நிறுவனம் (WHO) அவசரகால பயன்பாட்டிற்காக அஸ்ட்ராஜெனிகா / ஆக்ஸ்போர்டின் COVID-19 தடுப்பூசியின் 2 பதிப்புகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவற்றில் ஒன்றை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute Of India) தயாரித்துள்ளது. இரண்டாவது பதிப்பை AstraZeneca-SKBO (கொரியா குடியரசு) தயாரித்துள்ளது. தடுப்பூசிக்கு இந்த ஒப்புதல் என்பது இப்போது கோவக்ஸ் (COVAX) பிரச்சாரத்தின் கீழ் இந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படலாம் என்பதற்கான சான்று ஆகும். மேலும், இந்த தடுப்பூசியை வெவ்வேறு நாடுகளில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவது உதவியாக இருக்கும்.

WHO இது குறித்து கூறியது என்ன?

WHO-யின் உதவி இயக்குநர் ஜெனரல் மரியாங்கெலா சிமாவோ (Mariangela Simao) தனது அறிக்கையில், "இதுவரை தடுப்பூசிகளைப் பெறாத நாடுகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கோவாக்கின் (Covacs) கீழ் உள்ள மக்களுக்கான தடுப்பூசிகளைத் வழங்க முடியும். இது சமமான தடுப்பூசி (vaccination) விநியோகத்திற்கான ஒரு முயற்சியாகும். இருப்பினும், எல்லா இடங்களிலும் முன்னுரிமை மக்களுக்கு தடுப்பூசி எளிதில் கிடைக்க முயற்சிக்க வேண்டும். இதற்காக நாம் உற்பத்தி திறனை (manufacturing capacity) அதிகரிக்க வேண்டும் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் விரைவில் தங்கள் தடுப்பூசியை WHO-க்கு சமர்ப்பிக்க வேண்டும், இதனால் அவை விரைவில் மதிப்பாய்வு செய்யப்படும்.

ALSO READ | Free Vaccine: 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசியா? அரசு சொல்வது என்ன?

4 வார விசாரணைக்குப் பிறகு ஒப்புதல் பெறப்பட்டது

அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டு (Oxford vaccines) தடுப்பூசிகள் இரண்டிலும், அவற்றுக்கான குளிர் சங்கிலிகளின் தேவை, தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய தரவு, இடர் மேலாண்மை (risk management) போன்ற பல்வேறு அம்சங்களை மதிப்பிட்டுள்ளன. இந்த செயல்முறையை முடிக்க அவருக்கு 4 வாரங்கள் பிடித்தன. முன்னதாக, அவசரகால பயன்பாட்டிற்காக ஃபைசர் (Pfizer)-பயோ நோடெக் (BioNotech) கோவிட் -19 தடுப்பூசிக்கு WHO ஒப்புதல் அளித்தது.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More