Home> India
Advertisement

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியா ரஞ்சன் கோகோய் பெயர் பரிந்துரை

இந்திய சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பொறுப்பேற்க உள்ளார். 

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியா ரஞ்சன் கோகோய் பெயர் பரிந்துரை

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா, வரும் அக்டோபர் 2 ஆம் நாள் ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த தலைமை நீதிபதி பதவியேற்க உள்ளார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் அனுப்பினார். அதில், உச்ச நீதிமன்றம் நடைமுறைப்படி, தங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரைக்கும்படி கேட்டு எழுதியுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பெயர் பரிந்துரை செய்துள்ளார். இவர் வரும் அக்டோபர் 3 ஆம் நாள் பதவியேற்க்க உள்ளார். இவர் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிபதி ரஞ்சன் கோகோய் கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 நாள் குவாஹாட்டி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் பிப்ரவரி 12, 2011 ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் செயல்பட்டு உள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Read More