Home> India
Advertisement

அஜ்மீர் - சீல்டா ரயில் விபத்து: உதவி எண்களை அறிவிப்பு

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அஜ்மீர் - சீல்டா விரைவு ரெயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து நேரிட்டது. விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.  65-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அஜ்மீர் - சீல்டா ரயில் விபத்து: உதவி எண்களை அறிவிப்பு

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அஜ்மீர் - சீல்டா விரைவு ரெயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து நேரிட்டது. விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.  65-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. 

காலை 5:20 மணியளவில் ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக வடக்கு மத்திய ரயில்வே புரோ அமித் மால்வியா கூறியுள்ளார். 

அஜ்மீரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் சீல்டா நோக்கி சென்ற விரைவு ரெயில் (எண் 12988 ) இன்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அனில் சக்சேனா கூறினார்.

ரயில் தடம் புரண்டு காரணம் பற்றி கேட்டபோது, அனில் சக்சேனா, "காலையில் அடர்த்தியான பனி இருந்ததால்" இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறினார்.

இந்த விபத்தால், தானாபூர்-ஹவுரா பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று மால்வியா கூறிஉள்ளார்.

உயர் அதிகாரிகள் விபத்து நேரிட்ட பகுதிக்கு உடனடியாக விரைந்த்தனர்.  மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

விபத்து தொடர்பாக தகவல்களை அறிந்துக் கொள்ள இந்திய ரயில்வே உதவி எண்களை அறிவித்து உள்ளது.

 

 

Read More