Home> India
Advertisement

குஜராத் கலவரம்: மோடிக்கு எதிரான வழக்கு நவம்பர் 19ம் தேதி விசாரணை

குஜராத் கலவரம் தொடர்பாக மோடியை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மீதான வழக்கு வரும் 19 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

குஜராத் கலவரம்: மோடிக்கு எதிரான வழக்கு நவம்பர் 19ம் தேதி விசாரணை

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரங்கள் நடந்தது. அப்பொழுது சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சில பெட்டிகள் மற்றும் குல்பர்க் குடியிருப்புப் பகுதிகளில் வன்முறையாளர்களால் தீயிடபட்டன. அதில் பலர் கொல்லப்பட்டார்கள். இந்த கலவரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஷான் ஜஃப்ரி கொல்லப்பட்டார். இதனால் குஜராத் மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது.

அப்போது குஜராத் மாநிலத்தின் முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். குஜராத் மாநிலத்தில் ஏற்ப்பட்ட கலவரத்துக்கு நரேந்திர மோடியே காரணம் என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு அடுத்து நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் சுமார் 58 பேர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் நரேந்திர மோடிக்கு சம்பந்தம் இருப்பதற்க்கான சரியான ஆதாரம் இல்லை என்றுக் கூறி, அவரை வழக்கில் இருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு விடுவித்தது.

இதனை எதிர்த்து கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஷான் ஜஃப்ரி மனைவி ஸகியா ஜாப்ரி, கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் அவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு வரும் நவம்பர் 19 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டது சரியா? இல்லையா? என்பது வரும் திங்கள் அன்று தெரியவரும். 

Read More