Home> India
Advertisement

குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்துவது தவறா? 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை NO!

SC On 2 Child Policy Milestone :  மா!நில அரசு வேலைக்கு தகுதி நிர்ணயிப்பது என்பதும் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்பது பாரபட்சமானதல்ல

குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்துவது தவறா? 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை NO!

ஒருவர் எத்தனை குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது நாட்டிற்கு நல்லது என்ற ராஜஸ்தான் அரசாங்கத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்தில் தவறு ஏதுமில்லை என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான தகுதி தொடர்பான வழக்கில், இரண்டு குழந்தைகள் தகுதி அளவுகோலை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்த தீர்ப்பில் மாநில அரசு வேலைக்கு தகுதி நிர்ணயிப்பது என்பதும் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்பது பாரபட்சமானதல்ல என்று உறுதி செய்த நீதிபதி, மாநில அரசின் இந்த சட்டம், அரசியலமைப்பை மீறவில்லை என்றும் தெளிவாக கூறிவிட்டது.

ராஜஸ்தான் பல்வேறு சேவை திருத்த விதிகள் 2001 (The Rajasthan Various Service (Amendment) Rules, 2001) இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்று கூறுகிறது.  

2017 இல் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற  முன்னாள் இராணுவ வீர ராம்ஜி லால் ஜாட் என்பவர், ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க அவருக்கு தகுதி இல்லை என்ற நிலையில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான நீதிமன்ற அமர்வு, ராஜஸ்தான் காவல்துறை துணை சேவை விதிகள், 1989 இன் விதி 24 (4) இல், “ஜூன் 1 அல்லது அதற்குப் பிறகு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், பணி நியமனம் பெற தகுதி பெறமாட்டார்கள்” என்ற விதியானது பாரபட்சமற்றது மற்றும் அரசியலமைப்பை மீறவில்லை என்று கூறிவிட்டது.

மேலும் படிக்க | முதல்வர் பிறந்தநாளில் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... முழு விவரம்!

இந்த விதியின் பின்னணியில், நாட்டின் நலனுக்காக குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதே நோக்கம் என்று நீதிபதிகள் தீபாங்கர் அடங்கிய அமர்வு கூறியது.  

ஜூன் 1, 2002 க்குப் பிறகு ஒருவருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்ததால், அவர் மாநிலத்தின் அரசு வேலைவாய்ப்பிற்கு தகுதியற்றவர் என்ற அடிப்படையில், 1989 ஆம் ஆண்டு ராஜஸ்தான் காவல்துறை துணை சேவை விதிகளின் விதி 24 (4) இன் கீழ், ஜாட்டின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகிய அவரது கோரிக்கை  நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எவ்வாறாயினும், இரண்டு குழந்தைகளுக்கான தகுதி நெறிமுறையை பரிந்துரைக்கும் விதிகளுக்கு மேலதிகமாக, முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்துவதற்கான விதிகள் உள்ளன, அங்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இல்லை என்ற நிபந்தனை குறிப்பிடப்படவில்லை என்று முன்னாள் ராணுவ வீரர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இருந்தபோதிலும், காரண காரியங்களை விளக்கமாக சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற அமர்வு, ராஜஸ்தான் மாநில அரசு மற்றும் காவல்துறை இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்ற பெற்றோர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு தகுதி தொடர்பான விதிமுறைகள் சரியானவை மற்றும் அரசியல் சாசனத்தை மீறாதவை என்று தீர்ப்பளித்தது.

மேலும் படிக்க | இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது சாந்தன் உடல்! வேதனை விடை கொடுத்த தமிழர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More