Home> India
Advertisement

வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் 5 பிராந்திய மையங்கள் - ராஜ்யவர்தன் ராத்தோர்!

ஐந்து பிராந்திய மையங்கள் ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர் தெரிவித்துள்ளார்!

வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் 5 பிராந்திய மையங்கள் - ராஜ்யவர்தன் ராத்தோர்!

2017-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், இலக்கு ஒலிம்பிக் போடியம் (TOP) திட்டத்தின் கீழ் 175 விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டுச் செலவிற்காக ரூ. 3.14 கோடி அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர் தெரிவித்துள்ளார்!

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியம் (NSDF)-ல் இருந்து இந்த தொகை வெளியிடப்பட்டதாக, ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அமைச்சர் பதிலளித்துள்ளார்.

தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியம் (NSDF)-விலிருந்து அளிக்கப்படுத் இந்த பாக்கெட் அலவென்ஸ் (OPA) தொகையானது மாதத்திற்கு ரூ .50,000 எனும் சராசரியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிப் போட்டிகளுக்கான சாத்தியமான பதக்க வாய்ப்பை அடையாளம் காணவும், அதற்காக வீரர்களை தயார் செய்யவதையும் இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த வசதிகள் பெறவும், பிற தேவைகென பிற நிறுவனங்களில் தங்களின் தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சிக்கும் இந்த நிதி உதவி வழங்கப்படுகின்றது.

மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் முறையே 110 மற்றும் 67 விளையாட்டு வீரர்கள் தங்கள் தகுதி சோதனைகளில் தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகு பிரச்சணைகளை கலைய ஐந்து பிராந்திய மையங்கள் ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார், மேலும் அத்திட்டத்தின் படி ஒரு மையம் ஏற்கனவே ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்!

Read More