Home> Social
Advertisement

வரம்பு மீறி பேச வேண்டாம் என BJP அமைச்சர்களுக்கு மோடி ஆடர்!

பொது பிரச்சனைகளில் வரம்பு மீறி பேச வேண்டாம் என பா.ஜ.க எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு...! 

வரம்பு மீறி பேச வேண்டாம் என BJP அமைச்சர்களுக்கு மோடி ஆடர்!

பா.ஜ.க. அமைச்சரின் உரையாடல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க. எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடினார்.

சமூக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக் என பலவற்றை பிரதமர் நரேந்திரமோடி அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார். மேலும், கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில தலைவர்கள் என பலருடன் மின்னணு தகவல் முறை மூலமாக தொடர்பு கொண்டு வருகிறார். 

பா.ஜ.க. சார்பில் 274 மக்களவை உறுப்பினர்கள், 68 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்நிலையில், நரேந்திர மோடி ஆப் (APP) மூலம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அனைத்து எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பா.ஜ.க. எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அவர் பேசியதாவது:- மீடியாக்கள் முன்னதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதற்கு தெளிவான செய்தியை கொடுத்து உள்ளார். “நாம் தொடர்ந்து செய்யும் தவறுகள் மீடியாக்களுக்கு தீனி போட்டு வருகிறது. மீடியாக்கள் கேமராக்கள் முன்னதாக பேசும்போது, நாம் சிறந்த சமூக விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் நினைத்துக்கொண்டு வார்த்தைகளை பிரயோகம் செய்கிறோம். 

அது நம்மை சிக்க வைக்கிறது, நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகளை மீடியாக்கள் ஊதி பெரிதாக்குகிறது. தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் என எந்த பிரச்னைகளை எடுத்து கொண்டாலும்  இது நடக்கிறது. இதை பற்றிய கொஞ்சமும் கவலைப்படாமல் கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது.

எனவே இதுபோன்ற அர்த்தமற்ற கருத்துக்கைள கூறுவதையும், ஆர்வக்கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதையும் நாம் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். ஊடகங்கள் அவர்களது பணியை செய்யட்டும்,” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

Read More