Home> India
Advertisement

முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றம் மோடி அரசாங்கத்தின் பெரிய வெற்றி!!

திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றம் மோடி அரசாங்கத்தின் பெரிய வெற்றி!!

புதுடெல்லி: திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

முத்தலாக் முறை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா, கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவை நீக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் காங்கிரஸ், திரிணாமூல், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று வலியுறுத்தின. ராஜ்யசபாவில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. 

சமீபத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதியானது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, மக்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த மாதம் 21-ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த மசோதா மீது கடந்த ஜூலை 25-ஆம் நாள் மக்களவையில் விவாதம் நடைபெற்றது. பின்னர், திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்களவையில் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ், திரிணாமூல், திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து இந்த மசோதாவை எதிர்த்து வந்தனர். பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக கூட முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து வெளிநடப்பு செய்தது. 

இதனையடுத்து இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 99 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாக வந்தன. 84 வாக்குகள் மசோதாவுக்கு எதிராக இருந்தன. இதனால் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. முத்தலாக் மசோதாவிற்கு எதிராக அதிமுக, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை. இந்த மசோதா நிறைவேற இதுவும் ஒருக்காரணமாக அமைந்தது.

Read More