Home> India
Advertisement

ராஜ்நாத் சிங்கின் திடீர் ஈரான் பயணம்!! பீதியில் சீனா, பதட்டத்தில் பாகிஸ்தான்!!

ரஷ்யாவில் இருந்து திரும்பும் வழியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீரென ஈரானுக்குச் சென்றார்.

ராஜ்நாத் சிங்கின் திடீர் ஈரான் பயணம்!! பீதியில் சீனா, பதட்டத்தில் பாகிஸ்தான்!!

புதுடில்லி: ரஷ்யாவில் (Russia) இருந்து திரும்பும் வழியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீரென ஈரானுக்குச் (Iran) சென்றார். நாட்டின் வடகிழக்கு எல்லையில் சீனா மற்றும் மேற்கு எல்லையில் பாகிஸ்தான் நமக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரின் ஈரான் பயணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பொதுவாக அரசியல் இராஜதந்திரம் சமிக்ஞைகளின் விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shangai Cooperation Organisation) கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றபோது மாஸ்கோவில் இதுபோன்ற ஒரு சமிக்ஞை காணப்பட்டது.

இந்தியாவின் இராஜதந்திர சுழற்சியில் சீனா சிக்கிக்கொண்டது

இந்த நேரத்தில், சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வீ ஃபெங்கும் (Wei Fenghe) அங்கு இருந்தார். ஆனால் இந்தியா குறித்து சீனா பதட்டமாக இருப்பது அப்பட்டமாக தெரிந்தது. சீன அமைச்சர் பதட்டமாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைப் (Rajnath Singh) பார்த்துக்கொண்டே இருந்ததை அனைவரும் கவனித்தனர். ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரும் இதை கவனித்தார். ஆனால் இந்த முழு சந்திப்பில், சீன அமைச்சர் ஃபங்கேவின் பார்வை இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமிருந்து விலகவில்லை.

இதன் பொருள் என்னவென்றால், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா மிகவும் ஆர்வமாக உள்ளது. அதாவது, நேற்று வரை போர் குறித்த அச்சுறுத்தலை அளித்து வந்த சீன இப்போது பேச்சுவார்த்த நடத்தத் துடிக்கிறது. சீனாவின் (China) மன மாற்றம் இந்தியாவின் மிகப்பெரிய இராஜதந்திர வெற்றியாக கருதப்படுகிறது.

ALSO READ: “சீண்ட நினைத்தால் சிக்கிக் கொள்வீர்கள்” – பாகிஸ்தானை எச்சரித்த CDS பிபின் ராவத்!!

பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்கான ஏற்பாடுகள்

குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்காவின் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் எந்த பாதகமான விளைவும் ஏற்படவில்லை. மோடி அரசாங்கம் ஈரானுடன் ஒரு முக்கியமான நட்பு நாடாக 2014 முதல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

லடாக் எல்லையில் சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் பெய்ஜிங் பாகிஸ்தான் இராணுவத்திற்கு தளவாட ஆதரவை வழங்கியுள்ளது. சீனா இந்த விதத்தில் மறைமுகமாக பாகிஸ்தானை (Pakistan)  தூண்டுவதும், பாகிஸ்தான் இந்தியா-சீனா இடையில் உள்ள பதட்டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பதும் இந்தியா நன்கு அறிந்த விஷயங்களே.

ஈரானுக்கு ராஜ்நாத் சிங் மேற்கொண்டுள்ள திடீர் பயணம் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மெற்கொள்ளப்பட்டிருக்கலாம். சீனா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் சரியான பதில் அளிக்கும் விதமாகவும், உலக அரங்கில் இந்தியாவின் பலத்தை புரிய வைக்கும் விதமாகவும் இந்த பயணம் அமையலாம் என நம்பப்படுகின்றது. 

ALSO READ: சீண்டினால் சிதறிப்போவீர்கள்... ராஜ்நாத் சிங் சீனாவிற்கு எச்சரிக்கை..!!!

Read More