Home> India
Advertisement

ராஜ்நாத் சிங்- எல்லை நிலவரம் குறித்து ராணுவ மந்திரியுடன் ஆலோசனை!!

கடந்த சில நாட்களாக காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் உள்ள இந்திய கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது.  நேற்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 8 பேர் உயிர் இழந்தனர். இதனையடுத்து இதற்க்கு பதிலடி கொடுக்க இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.  

ராஜ்நாத் சிங்- எல்லை நிலவரம் குறித்து ராணுவ மந்திரியுடன் ஆலோசனை!!

புதுடெல்லி: கடந்த சில நாட்களாக காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் உள்ள இந்திய கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது.  நேற்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 8 பேர் உயிர் இழந்தனர். இதனையடுத்து இதற்க்கு பதிலடி கொடுக்க இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.  

இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், இராணுவத் தளபதியான ஜெனரல் தல்பீர் சிங் சுகாக், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சகம் மற்றும் இதர மூத்த உள்துறை அதிகாரிகளுடன் நேற்று இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதி நிலைமை குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தினார். 

அத்துமீறி எல்லையோர கிராமங்களில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பதிலடி நடவடிக்கைகள் பற்றி அவர்கள் விரிவாக மத்திய மந்திரிகளிடம் எடுத்துக் கூறினர்.

Read More