Home> India
Advertisement

அதிர்ச்சி!! சாலையில் கிடந்த வாக்குப்பதிவான EVM எந்திரங்கள்: வீடியோ

ராஜஸ்தான் மாநிலத்தின் சஹாபாத் பகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கேட்பாரற்று சாலையில் கிடந்தது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. 

அதிர்ச்சி!! சாலையில் கிடந்த வாக்குப்பதிவான EVM எந்திரங்கள்: வீடியோ

ராஜஸ்தான் மாநிலத்தின் சஹாபாத் பகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கேட்பாரற்று சாலையில் கிடந்தது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. 

நடந்து முடிந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் சட்டசபை தேர்தல்களின் முடிவு வரும் டிசம்பர் 11-ஆம் நாள் வெளியாகவுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தின் 200 தொகுதிகளில் 199 தொகுதிக்கு சட்டசபை தேர்தல் நேற்று (டிசம்பர் 7) நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணிக்கு வரை நடைபெற்றது. இதற்காக 52,000 வாக்குச்சாவடிகள் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பெண்களுக்கென ஒரு வாக்கு சாவடி அமைக்கப்பட்டது. இதில் 2 லட்சத்திற்கும் அதிகமான EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

fallbacks

199 தொகுதிகக்கான சட்டசபை தேர்தலில் மொத்தம் 72.7 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குபதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பரான் மாவட்டத்தில் உள்ள கிஷன்கஞ்சின் சஹாபாத் பகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கேட்பாரற்று சாலையில் கிடந்தது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. இதனையடுத்து இரண்டு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுக்குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

 

Read More