Home> India
Advertisement

இந்திய இரயில்வேயில் 11 லட்சம் கொள்ளைக்காரர்கள் -அறிக்கை

2016-ம் ஆண்டில் ரயில்வேயில் நடந்த திருட்டை பற்றி அறிக்கை ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த அந்த ஆண்டில் மட்டும் போலீசார் கிட்டத்தட்ட 11 லட்சம் திருடர்களை கைது செய்துள்ளனர்.

இந்திய இரயில்வேயில் 11 லட்சம் கொள்ளைக்காரர்கள் -அறிக்கை

2016-ம் ஆண்டில் ரயில்வேயில் நடந்த திருட்டை பற்றி இந்திய இரயில்வே நிர்வாகம் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் ஒரு சுவாரசியமான உண்மை தெரிய வந்துள்ளது. 

அதில், 2016-ம் ஆண்டு ரயில்யில் திருடியதாக கிட்டத்தட்ட 11 லட்சம் திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பயணிகள் பொருட்கள், பயணிகளின் பணப்பைகள், ரயில்வே கண்ணாடி, ரயில்வே கண்ணாடி குழாய் விளக்குகள், ரயில்வேக்கு சொந்தமான உலோகங்கள் போன்ற பொருட்கள் திருடப்பட்டதாக ரயில்வே போலீசார் பட்டியலிட்டுள்ளனர். இதற்க்கு காரணமான சுமார் 11 லட்சம் பேர் கடந்த ஆண்டு மட்டும் இந்திய ரயில்வே போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரயில் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு அதிகமான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இரயில் நிலையங்களில் கொள்ளையடிப்பதை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று ரெயில்வே அதிகாரிகளுக்கு கூறுகின்றனர். இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள பட்டியலில் அதிகபட்சமாக 2.23 லட்சம் பேர் மகாராஷ்டிரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்துள்ளனர்.அந்த பட்டியலில் தமிழ்நாடும் அடங்கும்.

Read More